This page has been fully proofread once and needs a second look.

80
 
भर्तृ साधारणद्रव्यापेक्षया बैवैलक्षण्यं न स्यात् । भर्तुराज्ञया दानस्

उभयत्राविशेषादिति चेन्न । आज्ञाग्रहणस्य तुल्यत्वेऽपि भर्तृसाधारणं

द्रव्यं स्वामित्वाविशेषेऽपि भार्यानुमतिं विना भर्त्रा विनियोक्तव्यं,

भार्यया तु भर्तुराज्ञयैव विनियोक्तव्यम्, पड्विधधनं तु स्वामित्वा-

विशेषेऽपि भर्त्रनुमत्या स्त्रियैव विनियोक्तव्यम् न भर्तेत्रेति प्रकारांतरेण

वैलक्षण्यसंभवात् । स्त्रीधनं तस्यां जीववत्यां भर्त्रा न ग्राह्यं, बलात्

ग्रहणे राज्ञा दंडय इत्याह माधवः ॥
 

 
न भतीर्ता नैव च सुतो न पिता भ्रातरो न च ।

आदाने वा विसर्गे वा स्त्रीधने प्रभविष्णवः ॥

यदि त्वेकतरोऽप्येषां स्त्रीधनं भक्षयेद्वलात् ।

सवृद्धिकं प्रदाप्यः स्याद्दण्डं चैव समाप्नुयात् ॥ इति ॥

अनन्तरमपि तत्प्रजया तदभावे यथाधिकारं ग्राह्यं, अयमर्थः

पूर्वमेव प्रतिपादितः ॥
 

 
ஸ்வா
தந்த்ரியமில்லா விடில், பர்த்தாவுக்குப் பொதுவான தனத்தைக்

காட்டிலும் விசேஷம் யாது?. பர்த்தாவின் அனுமதியால் கொடுப்
 
பது எல்லாத் தனத்திற்கும் பொதுவான தல்லவா?.
 

 

 
பதில்:- பொதுத் தனம் இருவருக்கும் பொதுவாயினும்.
 
செலவிடலாம்.
 

பார்யையின் அனுமதியின்றி பர்த்தா
 
செலவிடலாம்.
பார்யையோ பர்த்தாவின் ஆக்ஞையின்றி செலவிடக்கூடாது.

ஆறுவித தனமோவெனில், ஸ்வாமி என்பது ஸமானமாயினும்,

பர்த்தாவின் அனுமதியால் ஸ்த்ரீயே செலவிடவேண்டும். பர்த்தா

செலவிடக்கூடாது, என்ற வ்யத்யாஸமிருக்கிறது.
 

 
ஸ்த்ரீதனத்தை, அவள் ஜீவித்திருக்கும்போது, பர்த்தா

எடுக்கக்கூடாது. பலாத்காரமாக எடுத்தாலரசன் தண்டிக்கலாம்,

என்றார் மாதவர்.
 

 
பர்த்தா, புத்ரன், ஸஹோதரன் இவர்கள் ஸ்த்ரீதனத்தை

வாங்கவோ, செலவிடவோ அதிகாரிகளல்லர். யாராவது ஒருவர்

எடுத்துக்கொண்டால், வட்டியுடன் கொடுக்கவேண்டும்.
அப
ராதமும் செலுத்த வேண்டும்.
 

 
அவளுக்குப் பிறகு, புத்ரன் முதலானவர் அதிகாரப்படி

அடையவும். இவ்விஷயம் முன்னமே உரைக்கப்பட்டிருக்கிறது.