This page has not been fully proofread.

6-4
 
न नाभिं दर्शयेदा गुल्फाद्वासः परिदध्या न्न स्तनौ विवृतौ कुर्यान्न
हसेदपावृतं भर्तारं तद्बन्धून् वा न द्विष्यान्न गणिका धूर्ताभिसारिणी-
प्रत्रजिता प्रेक्षणिका मायाकुहककारिका दुःशीलाभिस्सहैकत्र वसेत्
संसर्गेण चारित्रं दुष्यतीति ॥
 
3/47:-
भक्तिं श्वशुरयोः कुर्यात् पत्युश्चापि विशेषतः ।
धर्मकार्येऽनुकूलत्व मर्थकार्येऽपि संयमम् ॥
प्रागल्भ्यं कामकार्येषु शुचित्वं निजविग्रहे ।
मङ्गळं सततं पत्युः सततं प्रियभाषणम् ॥
हरिद्राकज्जलं चैव सिंदुरं कुङ्कुमं तथा ।
कृपीसकञ्च तांबूलं मङ्गल्याभरणं शुभम् ॥
केशसंस्कारकवरीकरकर्णविभूषणम् ।
भर्तुर।युष्यमिच्छन्ती दूपयेन्न पतिव्रता ॥ इति ॥
 
வைத்யன், கிழவன் இவர்களைத் தவிர இதரர்களிடம் பேசக்
கூடாது, நாபி வெளியில் தெரியக்கூடாது. கால் பணிக்கட்டு
வரையில் வஸ்த்ர தாரணம். ஸ்தனங்கள் வெளியில் தெரியலாகாது.
ப்ரகாசமாகச் சிரிக்கக்கூடாது. பர்த்தாவையும், அவன் பந்துக்
களையும் தவேஷிக்கலாகாது. வ்யபிசாரிணீ,வேசி,கெட்டவள்,
ஸன்யாஸினீ, குறி சொல்பவள், மாயை வஞ்சனை செய்பவள்,
கெட்ட ஸ்வபாவமுள்ளவள் இவர்களுடன் ஓரிடத்தில் வஸிக்க
லாகாது. ஸஹவாஸத்தால் நடத்தை கெட்டுவிடும்.
 
ஆச்வலாயனர்:- பர்த்தாவினிடமும், மாமனார் மாமியாரிட
மும், பக்தி செய்க. தர்ம கார்யத்தில் அனுகூலமாயிருக்க. தன
விஷயத்தில் அடக்கமாயிருக்க. காம கார்யத்தில் ஸாமர்த்யம்,
தன் சரீரத்தில் சுத்தி, பதிக்கு எப்போதும் மங்களத்தைச்
செய்வது, எப்போதும் ப்ரியமாகப் பேசுவது, மஞ்சள், மை,
குங்குமம், ரவிக்கை, தாம்பூலம், மங்களாபரணம், தலை வாரிக்
கொள்வது, தலை முடிவது, கை காதுகளுக்கு அலங்காரம் இவை
களைப் பர்த்தாவின் ஆயுளைக் கோருகிற பதிவரதை நிந்திக்கக்
கூடாது. அனுஷ்டிக்கவேண்டும்.