This page has been fully proofread once and needs a second look.

रुदकं तृणानि कल्याणी वागित्येतानि वै सतोऽगारे न क्षीयन्ते
कदाचनेत्येवंवृत्तावनन्तलोकौ भवत इति ॥
 
अतिथिपूजनस्य आवश्यकत्वं कठवल्यामपि-
नचिकेताः स्वपितरमारब्धयज्ञदक्षिणात्वेन पीतोदकजग्धतृण-
दुग्धदोहनिरिन्द्रियगोप्रदाने क्रतोदक्षिणादानवैगुण्यात् पितुरनन्त-
लोकगमनं न भविष्यतीति विचिंत्य तत्परिहाराय कस्मै ऋत्विग्-
विशेषाय मां दास्यसीति पुनःपुनः पप्रच्छ । तं पिता क्रोधेन मृत्यवे
दास्यामि इत्युवाच । स च पितृवचनपालनमेच गरीयान् धर्म इति
तद्वचनगौरवेण यमभवनं गत्वा प्रोषिते यमे तिस्रो रात्रीरपूजित एव
उवास । ततः प्रोष्यागतं यमममात्या ऊचुः ॥
 
वैश्वानरः प्रविशत्यतिथिर्ब्राह्मणो गृहान् ।
तस्यैतां शान्तिं कुर्वंति हर वैवस्वतोदकम् ॥
 
நிராகரிக்கலாகாது. அன்னமில்லாவிடில், இடம், தீர்த்தம்,
பாய், நல்ல வார்த்தை இவைகள் நல்லவர்கள் வீட்டில் ஒரு
போதும் குறையாதவை. இப்படி ஆசாரமுள்ளவர் அனந்தமான
லோகத்தை அடைவார்கள்.
 
அதிதிபூஜை ஆவச்யகமென்பது கடஉபநிஷத்திலும்:- நசிகேதன்
என்பவன், தன் தகப்பன் ஆரம்பித்த யக்ஞ தக்ஷிணையாக,
ஜலம்,புல் தின்ன ஸாமர்த்யமற்றதும், கறவையில்லாததும்,
மறுபடி கன்றுபோடச் சக்தியற்றதுமான மாடுகளைக்
கொடுப்பதைப் பார்த்து, இதனால் தன் தந்தைக்கு ஆனந்தமற்ற
உலகமே கிடைக்குமென்றெண்ணி, என்னை எந்த ருத்விக்குக்குக்
கொடுக்கப்போகிறாயென்று அடிக்கடி. வினவ, தகப்பன்
கோபித்து 'உன்னை யமனுக்குக் கொடுக்கிறேன்" என்றார்.
மகனும் பிதாவின் வசனப்படி நடப்பதே மேலென்று நினைத்து
யமலோகம் சென்று, யமன் யாத்ரைசெய்திருந்த ஸமயத்தில்
மூன்றுநாள் பூஜிக்கப்படாமலே மூன்று தினம் யமன் வீட்டில்
தங்கினான். பிறகு திரும்பிவந்த யமனை நோக்கி, மந்த்ரிகள்
கூறினர்:-- 'அதிதிப்ராம்ஹணன் அக்னிபோல் வீட்டில்
ப்ரவேசிக்கிறான். அவனைத் தணிப்பது போல் ஜலத்தைக் கொடுக்கவும்.