This page has been fully proofread once and needs a second look.

तथा च कात्यायन:-
दक्षिणपूर्वद्वारे पूर्वेण पतिः प्रविशति दक्षिणेन पत्नीति ।
अग्निहोत्रगृहे तीर्थेनैव संचारः कर्तव्यः ॥
 
तथा च बोधामनः—
 
अन्तरेण चात्वालोत्करौ यज्ञस्य तीर्थं आचात्वाल आहवनी-
योत्करौ । ततः कर्तारो यजमानः पत्नी प्रपद्येरन् विसंस्थिते ।
संस्थिते च सञ्चरोनूत्करदेशमिति । विसंस्थिते असमाप्ते कर्मणि,
सञ्चरः प्रवेशो निर्गमश्च, संस्थिते समाप्ते कर्मणि पश्चादित्यर्थः ॥
होमसमये पत्न्या अग्नेरलङ्कारादिशुश्रूषा कर्तव्या ।
 
तथा च मनु:-
अग्निहोत्रस्य शुश्रूषा सन्ध्योपासनमेव च ।
कार्यं पत्न्या प्रतिदिनं बलिकर्म च नैत्यकम् ॥ इति ७९॥
अग्निशुश्रूषणं बहुभार्यस्य ज्येष्ठ्यैव कर्तव्यम् ।
 
அப்படியே காத்யாயனர்:- தெற்கு கிழக்குகளில் வாசலுள்ள
விடத்தில் கிழக்கால் பதியும், தெற்கால் பத்நியும்,அக்நிஹோத்ர
சாலையில் தீர்த்தத்தின் வழியாகவே ஸஞ்சாரம் செய்யவேண்டும்.
 
அப்படியே போதாயனர்:-சாத்வாலத்துக்கும் உத்கரத்துக்கும்
மத்தியில் யக்ஞ தீர்த்தம். சாத்வாலத்திலிருந்து ஆஹவனீயம்
உத்கரம் வரையில் ரித்விக்குகள், யஜமானன், பத்னீ
இவர்கள் யக்ஞம் முடியுமுன் இந்த வழியாக ப்ரவேசிக்கவும்.
யக்ஞம் முடிந்தபின் உத்கர தேசத்தின் வழியாக ப்ரவேசிக்கவும்.
 
ஹோம ஸமயத்தில் பத்னீ அக்னிக்கு அலங்காராதி
சுச்ரூஷை செய்ய வேண்டும்.
 
அதை மனு:- அக்நிஹோத்ர சுச்ரூஷை, ஸந்த்யா உபாஸனம்,
நித்யம், பலி போடுவது இவைகளைப் பத்னீ செய்யவேண்டும். (79)
 
அநேக பார்யையுள்ளவனுக்கு அக்கி சுச்ரூஷை மூத்தவளே
செய்யவேண்டும்.