This page has not been fully proofread.

260
 
मार्कण्डेय उवाच-
एतस्मिन्नेव काले तु द्युमत्सेनो महाबलः ।
लब्धचक्षुः प्रसन्नायां दृष्टयां सर्व ददर्श ह ॥
स सर्वानाश्रमान् गत्वा शैव्यया सह भार्यया ।
पुत्रहेतोः परामार्तिं जगाम भरतर्षभ ।
तावाश्रमालदीव वनानि च सरांसि च ।
तस्यां निशि विचिन्वन्तौ दंपती परिजग्मतुः ॥
श्रुत्वा शब्दं तु यं कञ्चि दुन्मुखः सुतशङ्कया ।
सावित्रीसहितोऽभ्येति सत्यवानित्यभाषत ॥
मिन्नैश्च परुषैः पादैः सत्रणैः शोणितोक्षितैः ।
कुशकण्टकविद्धाङ्गा वुन्मत्ता विव धावतः ॥
ततोऽमिसृत्य ते विंप्रैः सर्वैराश्रमवासिमिः ।
परिवार्य समाश्वास्य तावानीतौ स्वमाश्रमम् ॥
तत्व भार्यासहायस्स वृतो वृद्धैस्तपोधनैः ।
 
-
 
மார்க்கண்டேயர்:- இந்த ஸமயத்தில் ஆச்ரமத்திலிருக்கும்
த்யுமத்ஸேகன் கண்களை அடைந்தான். பார்வை தெளிவாயாகிய
வுடன் எல்லாவற்றையும் பார்த்தான். அவன் பார்யையான
சைப்யையுடன் எல்லா ஆச்ரமங்களுக்கும் சென்று பார்த்துப்
புத்ரன் விஷயமாய் மிகுந்த வருத்தத்தை அடைந்தான். அந்தத்
தம்பதிகள் அந்த இரவில், ஆச்ரமங்கள், நதிகள், காடுகள், குளங்
கள் எல்லாவற்றையும் சுற்றி அலைந்தனர். ஏதாவது சப்தத்தைக்
கேட்டாலும், ஸாவித்ரியுடன் ஸத்யவான் வருகிறானென்பான்
அரசன். பிளக்கப்பட்டதும், கடினமாகியதும், காயமுள்ளதும்,
ரத்தத்தால் நனைந்ததுமான பாதங்களுடன், நாணல்களாலும்
முட்களாலும் கிழிக்கப்பட்ட அங்கங்களுடையவர்களாய் பைத்
யக்காரர்கள் போல் ஓடியலைந்தனர். பிறகு அங்குள்ள ஆச்ரமங்
களில் வஸிக்கும் ப்ராமஹணர்கள் எல்லோரும் அவர்களிடம்
வந்து அவர்களை ஸமாதானம் செய்து ஆச்ரமத்திற்கு அழைத்
துச் சென்றனர். அவ்விடத்தில் வருத்தர்களான தபஸ்விகளால்
சூழப்பட்டவனாய், பார்யையுடனுள்ள அரசன் முன்னோர்களான