This page has not been fully proofread.

40%
 
257
 
मत्कृतेन हि तावद्य सन्तापं परमेष्यतः ।
जीवन्तावनुजीवामि भर्तव्यौ तौ मयेति ह ॥
तयोः प्रियं मे कर्तव्यमिति जानामि चाप्यहम् ॥
मार्कण्डेय उवाच -
 
एवमुक्त्वा स धर्मात्मा गुरुभक्तो गुरुप्रियः ।
उच्छ्रित्य बाहू दुःखार्तः सस्वरं प्ररुरोद ह ॥
ततोऽब्रवीत्तथा दृष्ट्वा भर्तारं शोककशिंतम् ।
प्रमृज्या भ्रूणि नेत्राभ्यां साविती धर्मचारिणी ॥
सावित्रयुवाच -
 
यदि मेऽस्ति तपस्तप्तं यदि दत्तं हुतं यदि ।
श्वश्रूश्वशुरभर्तॄणां मम पुण्याऽस्तु शर्वरी ॥
 
பற்றிக் கேட்டுக்கொண்டிருப்பார். ஓ மங்களே! நான் எனது
பிதாவையும்,துர்ப்பலையாயினும் பர்த்தாவை அனுஸரித்துள்ள
மாதாவையும்பற்றி எப்படி வருந்துகின்றேனோ அப்படி என்னைப்
பற்றிக்கூட வருந்தவில்லை. நான் செய்த கார்யத்தால் அவ்விரு
வரும் இப்பொழுது மிகுந்த பரிதாபத்தை அடையப்போகின்
றனர். பிழைத்திருக்கும் வரையில் அவர்களைப் போஷிக்க
வேண்டும் என்பதற்காக நான் பிழைத்திருக்கிறேன். அவர்
களுக்கு ப்ரியத்தைச் செய்யவேண்டுமென்பதை நான் அறிந்
துள்ளேன்.
 

 
மார்க்கண்டேயர்:- தர்மாத்மாவாயும், குருபக்தனாயும்,
குருப்ரியனாயுமுள்ள ஸத்யவான் இவ்விதம் சொல்லிவிட்டு
கைகளைத் தூக்கி, துக்கமுற்றவனாய் உரக்க அழுதான். சோகத்
தால் வருந்தும் பர்த்தாவைப் பார்த்து தர்மசாரிணியான
ஸாவித்ரீ, அவன் கண்களினின்றும் நீரைத் துடைத்து இவ்
விதம் சொன்னாள்.
 
ஸா
 
பவித்ரீ:- நான் செய்த தவமும், தானமும், ஹோமமும்
அழியாமலிருந்தால் எனது மாமியார், மாமனார்,பர்த்தா இவர்
களுக்கு இந்த இரவு நல்லதாய் இருக்கவேண்டும். வேடிக்கை
 
33