We're performing server updates until 1 November. Learn more.

This page has not been fully proofread.

251
 
ख्यातास्त्वन्नामधेयाथ भविष्यन्तीह शाश्वताः ।
पितुश्च ते पुत्रशतं भविता तव मातरि ॥
புØஎச4 :: 1
भ्रातरस्ते भविष्यन्ति क्षत्रिया स्त्रिदशोपमाः ॥
मार्कण्डेय उवाच -
 
एवं तस्यै वरं दत्वा धर्मराजः प्रतापवान् ।
निवर्तयित्वा सावित्रीं स्वमेम भवनं ययौ ।
सावित्र्यपि यमे याते भर्तारं प्रतिलभ्य च ।
जगाम तत्र यत्रास्य भर्तुः श्यावं कळेवरम् ॥
सा भूमौ प्रेक्ष्य भर्तार मुपसृत्य प्रगृह्य च ।
उत्संगे शिर आरोग्य भूमानुपविवेश ह ॥
संज्ञां च स पुनर्लब्ध्वा सावित्रीमभ्यभाषत ।
प्रोग्यागत इव प्रेम्णा पुनःपुनरुदीक्ष्य वै ॥
 

 
களுடையவர்களாய், உன்னுடைய பெயரால் ப்ரஸித்தர்களாய்
(ஸாவித்ரர்கள் என்பவர்களாய்) சாச்வதர்களாய் இருப்பார்கள்.
உன் பிதாவுக்கும், உன் மாதாவான மாளவியினிடத்தில் நூறு
புத்ரர்கள் உண்டாவார்கள். அவர்கள் மாளவர்கள் என்று ப்ர
ஸித்தர்களாய், தேவர்களுக்குச் சமானர்களாய், புத்ரபௌத்ரர்
களையுடையவர்களாய், சாச்வதர்களாயிருப்பார்கள்.
 
மார்க்கண்டேயர்:- இவ்விதம் தர்மராஜன் ஸாவித்ரிக்கு
வரனைக் கொடுத்து அவளைத் திரும்பச் செய்து தனது இருப்
பிடத்தை அடைந்தான். யமன் சென்ற பிறகு, ஸாவித்ரீ தனது
பர்த்தாவை அடைந்து, எந்த இடத்தில் தனது பர்த்தாவின்
ஒளியற்ற சரீரமிருக்கின்றதோ அந்த இடம் சென்றாள். அவள்
பூமியில் கிடக்கும் பர்த்தாவை அணுகி, கைகளால் எடுத்து, தன்
மடியில் அவன் தலையை வைத்துக்கொண்டு பூமியிலுட்கார்ந்
தாள். ஸத்யவானும் நினைவை அடைந்து, வெளியூர் சென்று
வந்தவன் போல் அன்புடன் அடிக்கடி ஸாவித்ரியைப் பார்த்துச்
சொல்லுகிறான்.