This page has not been fully proofread.

249
 
आर्यजुष्टमिदं वृत्तमिति विज्ञाय शाश्वतम् ।
सन्तः परार्थ कुर्वाणा नावेक्षन्ति परस्परम् ॥
 
न च प्रसादस्सत्पुरुषेषु मोधो न चाप्यर्थो नश्यति नापि मानः ।
यस्मादेतन्नियतं सत्सु नित्यं तस्मात् सन्तो रक्षितारो भवन्ति ॥
 
यम उवाच-
यथा यथा भाषसि धर्मसंहितं मनोनुकूलं सुपदं महार्थवत् ।
तथा तथा मे त्वयि भक्तिरुत्तमा वरं वृणीष्वाप्रतिमं पतिव्रते ॥
सावित्रयुवाच -
 
न तेऽपवर्गस्सुकृताद्विना कृतः तथा यथाऽन्येषु वरेषु मानद ।
वरं वृणे जीवतु सत्यवानयं यथा मृताह्येवमहं पतिं विना ॥
न कामये भर्तु विनाकृता सुखं न कामये भर्तृविनाकृता दिवम् ।
 
வதமான ஆசாரம் பெரியோர்களால் ஆசரிக்கப்பட்டது என்று
அறிந்து, பிறருக்கு உபகாரம் செய்யும் ஸாதுக்கள் ப்ருத்யுப
காரத்தை எதிர்பார்ப்பதில்லை. ஸாதுக்களிடமுண்டாகும் ப்ப
ஸாதம் வீணாவதில்லை. யாசிப்பவனின் கார்யமும் கெடுவதில்லை.
மானமும் கெடுவதில்லை. எக்காரணத்தால் ப்ரஸாதம்,கார்யம்,
மானம் என்ற மூன்றும் ஸாதுக்களிடம் நியதமாயிருக்கின்ற
தோ, ஆகையால் ஸாதுக்கள் ரக்ஷகர்களாய் ஆகின்றனர். (நீர்
எனக்கு ரக்ஷகராகவேண்டும்.)
 
யமன்:- ஓ பதிவ்ரதே! நீ தர்மத்துடன் கூடியதும், மன
திற்கு அனுகூலமாகியதும், நல்ல பதங்களுடையதும், சிறந்த
அர்த்தமுடையதுமாய் எவ்விதமெவ்விதம் பேசுகின்றாயோ
அவ்விதமவ்விதம் எனக்கு உன்னிடம் வாத்ஸல்யம் அதிகமாய்
உண்டாகின்றது. ஆகையால் நிகரற்ற மற்றொரு வரனை
 
வரிப்பாயாக.
 
ஸாவித்ரீ:- ஒ தேவ! மற்ற வரன்கள் போலல்ல, இந்த
வரன் ஸுக்ருதமில்லாமல் (ஸாதுவான தாம்பத்யயோகமில்லா
மல்) ஸாதுவாகாது. ஆகையால் இந்த ஸத்யவான் பிழைக்க
வேண்டும். இதையே வரனாகக் கோருகிறேன். பதியில்லாவிடில்
நான் இறந்தவளே. பர்த்தாவை விட்டுத் தனித்துள்ள நான்
ஸுகத்தை விரும்பேன். ஸ்வர்க்கத்தையும் விரும்பேன்.
 
32