This page has not been fully proofread.

246
 
अनुग्रहश्च दानं च सतां धर्मस्सनातनः ॥
एवंप्रायश्च लोकोऽयं मनुष्या शक्तिकौशलाः ।
सन्तस्त्वेवाप्यमित्रेषु दयां प्राप्तेषु कुर्वते ॥
 
ஈ-
पिपासितस्थेव भवेद्यथा पयः तथा त्वया वाक्यमिदं समीरितम् ।
विना पुनस्सत्यवतोऽस्य जीवितं वरं वृणीष्वेह शुभे यदिच्छसि ॥
सावित्र्युवाच -
 
=
 
ममानपत्यः पृथिवीपतिः पिता भवेत् पितुः पुत्रशतं तथौरसम् ।
कुलस्य सन्तानकरं च यद्भवेत् तृतीयमेतद्वरयामि ते वरम् ॥
 
यम उवाच -
 
कुलस्य सन्तानकरं सुवर्चसं शतं सुतानां पितुरस्तु ते शुभे ।
कृतेन कामेन नराधिपात्मजे निवर्त दूरं हि पथस्त्वमागता ।
 
தீங்கு செய்யாதிருத்தல், அனுக்ரஹம், (தயை) தானம் இவை
கள் ஸாதுக்களின் ஸநாதநமான தர்மமாகும். ஆகையால் நீர்
என்னிடம் தயை செய்யும். இவ்வுலகமும் பெரும்பான்மையில்
இவ்விதமாகவே இருக்கிறது. மனிதர்கள் சக்தி, கௌசலமிவை
யற்றவர்கள். ஸாதுக்களோ, தம்மிடம் வந்தவர்கள் (சரணாகதர்
கள்) சத்ருக்களாயினும் அவரிடம் கருணைபைச் செய்கின்றனர்.
 
யமன்:-மங்களே! நீ சொல்லிய இந்த வார்த்தை தாக
முள்ளவனுக்கு ஜலம் போல் உள்ளது. இந்த ஸத்யவானின்
உயிரைத் தவிர இஷ்டமான வரனைக் கேட்டுக்கொள்.
 
ஸாவித்ரீ:- எனது பிதாவுக்குப் புத்ரனில்லை. அவருக்கு
நூறு புத்ரர்கள் ஒளரஸர்களாக உண்டாகவேண்டும். அவர்கள்
குலத்தை வ்ருத்தி செய்கின்றவர்களா யிருக்கவேண்டும். இதை
மூன்றாவது வரனாய் உம்மிடமிருந்து வரிக்கிறேன்.
 
யமன்:- ஓ ராஜபுத்ரீ! குலத்தை வருத்தி செய்பவரும்,
தேஜஸ்ஸுடையவருமான நூறு பிள்ளைகள் உன் பிதாவுக்கு
உண்டாவார்கள். பூர்ணமான காமத்துடன் நீ திரும்பிச்செல்.
வழியிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டாய்.