This page has been fully proofread once and needs a second look.

213
 
जगाम पावकाभ्याशं तं चोवाच वराङ्गना ।

मामग्ने कामसंतप्तां त्वं कामयितुमर्हसि ॥

करिष्यसि न चेदेवं मृतां मामुपधारय ।

अहमङ्गिरसो भार्या शिवा नाम हुताशन ॥

शिष्टाभिः प्रहिता प्राप्ता मन्त्रयित्वा विनिश्रयम् ॥

 
अग्निरुवाच -
 

कथं मां त्वं विजानीषे कामार्तमितराः कथम् ॥

शिवोवाच-

अस्माकं त्वं प्रियो नित्यं विभीमस्तु वयं तव ।

त्वचित्तमिङ्गितैर्ज्ञात्वा प्रेषिताऽस्मि तत्रान्तिके ॥

मैथुनायेह संप्राप्ता कामं प्राप्तुं हितं चर ।

यातरो मां प्रतीक्षन्ते गमिष्यामि हुताशन ॥
 

 
அவனை நோக்கிச் சொன்னாள். "ஓ அக்னே! நான் உம்மை

ஆசித்துள்ளேன். நீர் என்னைக் கருதவேண்டும். இல்லாவிடில்

நான் இறந்துவிடுவேன் என்று அறியும். நான் அங்கிரஸ்ஸின்

பார்பையையான 'சிவா' என்பவள். மற்றவர்களும் சேர்ந்து
ஆலோ
சித்து நிர்ணயம் செய்து என்னை அனுப்பினார்கள்" என்று.
 

 
அக்னி சொல்வதாவது:- நான் காமத்தால் வருந்தியுள்ளேன்

என்று நீ எவ்விதமறிந்தாய்? மற்றவரும் எவ்விதமறிந்தனர்?
 

 
சிவை சொல்லுகிறாள்:- ஸப்தருஷிகளின் பத்னிகளென்று

எவர்களைச் சொன்னீரோ அவர்கள் எல்லோரும் உம்மிடம்
ப்ரீதி
யுடனிருக்கின்றோம். ஆனாலும் உம்மிடம் தெரிவிக்கப்
பயந்
திருந்தோம். இப்பொழுது இங்கிதங்களால் உம்முடைய

சித்தத்தை அறிந்து அவர்களால் உம்மிடம் நான் அனுப்பப்பட்
டேன்.
உம்மிடம் சேருவதற்காக வந்தேன். எனக்கு ஹிதத்தைச்

செய்யும். மற்றவர்கள் என் வரவை எதிர்பார்த்திருக்கின்றனர்.

நான் செல்கிறேன்.