This page has not been fully proofread.

204
 
उटजात्तु ततस्तसान्निश्चक्राम स वै द्विजः ।
चपुपा द्यां च भूमिं च व्याप्य वायुरिवोद्यतः ॥
स्वरेण विप्रस्सौक्ष्म्येण त्रीन् लोकाननुनादयन् ।
उवाच चैनं धर्मज्ञं पूर्वमामन्त्र्य नामतः ॥
धर्मोऽहमस्मि भद्रं ते जिज्ञासार्थ तवानघ ।
प्राप्तस्सत्यं च ते ज्ञात्वा प्रीति परमा त्वयि ॥
विजितश्च त्वया मृत्युर्योऽयं त्वामनुगच्छति ।
रंध्रान्वेषी तव सदा त्वया धृत्या वशीकृतः ॥
न चास्ति शक्तिस्त्रैलोक्ये कस्यचित् पुरुषोत्तम ।
पतित्रतामिमां साध्वीं तवोदीक्षितुमप्युत ॥
रक्षिता त्वद्गुणैरेषा पतिव्रतगुणैस्तथा ।
अधृप्या यदियं ब्रूयात्तथा तन्नान्यथा भवेत् ॥
 
அந்த ப்ராம்ஹணன் வெளியில் வந்தான். தன் சரீரத்தால்
ஆகாசத்தையும் பூமியையும் வ்யாபித்து, காற்றுப்போல் மூன்று
உலகங்களையும் ஒலிக்கச்செய்யும் ஸ்வரத்தால், ப்ராம்ஹணனைப்
பெயரால் அழைத்துச் சொல்லுவதாவது.
 
ş ஸுதர்சனா! நான் தர்மதேவன். உனக்கு நன்மை
உண்டாகும். பாபமற்றவனே! உன்னைப் பரீக்ஷிக்க வந்தேன்.
உன் ஸத்யத்தை அறிந்து, உன்னிடம் எனக்கு மிக்க ஸந்தோஷ
முண்டாகியது. எந்த மருத்யுதேவன் உன்னைத் தொடர்ந்து
வருகின்றானோ அவனை நீ ஜயித்துவிட்டாய். எப்பொழுதும்
உனது பிசகைத் தேடிக்கொண்டிருக்கும் ம்ருத்யுதேவன் உனது
தைர்யத்தால் ஜயிக்கப்பட்டான். ஒ புருஷோத்தம! மூன்றுலகங்
களிலும் மஹாபதிவ்கதையான இவளைப் பார்ப்பதற்குக்கூட ஒரு
வனுக்கும் சக்தியில்லை. இவள் உனது குணங்களாலும், தனது
பாதிவ்ரத்ய குணங்களாலும் ரக்ஷிக்கப்பட்டிருக்கிறாள்.
 
ஒருவராலும் அவமதிக்கப்படாத இவள் எதைச் சொல்
வாளோ அது அப்படியே ஆகும், வேறுவிதமாகாது. தனது