This page has been fully proofread once and needs a second look.

203
 
अतिथिः पूजितो यस्य गृहस्थस्य तु गच्छति ।

नान्यस्तस्मात् परो धर्म इति प्राहुर्मनीषिणः ।

प्राणा हि मम दाराश्च यच्चान्यद्विद्यते वसु ।

अतिथिभ्यो मया देयमिति मे व्रतमाहितम् ॥

निस्सन्दिग्धं यथा वाक्यमेतन्मे समुदाहृतम् ।

तेनाहं विप्र सत्येन स्वयमात्मानमालभे ॥

पृथिवी वायुराकाश मापो ज्योतिश्च पञ्चमम् ।

बुद्धिरात्मा मनः कालो दिशश्चैव गुणा दश ॥

नित्यमेव हि पश्यन्ति देहिनां देहसंश्रिताः ।

सुकृतं दुष्कृतं चापि कर्म धर्मभृतां वर ॥

यथैपा नानृता वाणी मयाऽद्य समुदीरिता ।

तेन सत्येन मां देवाः पालयन्तु दहन्तु वा ॥

ततो नादस्समभवद्दिक्षु सर्वासु भारत ।

असकृत् सत्यमित्येवं नैतन्मिथ्येति सर्वतः ॥
 

 
தர்மம், வந்த அதிதிகளைப் பூஜிப்பதேயாம். எவனால் அதிதி

பூஜிக்கப்பட்டுச் செல்லுகிறானோ, அவனுக்கு, அதைவிடச்

சிறந்த தர்மம் வேறு ஒன்றில்லையெனப் பெரியோர்கள் சொல்லு

கின்றனர். எனது ப்ராணன்கள், பார்யை, பணம் இவையெலாம்

அதிதிகளுக்குக் கொடுக்கத்தகுந்ததென்பது என் வ்தமாகும்.

இவ்விதம் சொல்லிய இந்த வாக்யம் ஸந்தேஹமின்றிச் சொல்லப்

பட்டது. அந்த ஸத்யத்தால் தானாகவே என்னைத் தொட்டுக்

கொள்ளுகிறேன். பூமி, வாயு, ஆகாயம், ஜலம், அக்னி, புத்தி,

ஆத்மா, மனது, காலம், திக்குகள், பத்து இந்த்ரியங்கள் இவை
கள்
எப்பொழுதும் ப்ராணிகளின் தேஹங்களிலிருந்து புண்ய

பாபங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இப்பொழுது

நான் சொல்லிய வார்த்தை பொய்யல்ல, ஸத்யமாகியதே. அந்த

ஸத்யத்தால் தேவர்கள் என்னைக் காக்கவேண்டும், அல்லது

தஹித்தாலும் தஹிக்கலாம். இவ்விதம் சொல்லியவுடன் எல்லா
த்
திக்குகளிலும் 'இது ஸத்யம், இது பொய்யல்ல' என்று அடிக்
கடி
சப்தம் உண்டாயிற்று. பிறகு அந்தப் பர்ணசாலையினின்றும்