This page has not been fully proofread.

199
 
गृहस्थ था व जेष्यामि मृत्युमित्येव स प्रभो ।
प्रतिज्ञामकरो द्वीमान् दीप्ततेजा विशांपते ॥
तामथौघवतीं राजन् स पावकसुतोऽब्रवीत् ।
अतिथेः प्रतिकूलं ते न कर्तव्यं कथञ्चन ॥
येन येन च तुष्येत नित्यमेव त्वयाऽतिथि: ।
अप्यात्मनः प्रदानेन न ते कार्या विचारणा ॥
एतदूतं मम सदा हृदि संपरिवर्तते ।
गृहस्थानां च सुश्रोणि नातिथेर्विद्यते परम् ॥
प्रमाणं यदि वामोरु वचस्ते मम शोभने ।
इदं वचनमव्यग्रं हृदि त्वं धारयेस्सदा ॥
निष्क्रांते मयि कल्याणि तथा सन्निहितेऽनघे ।
नातिथिस्तेऽवमन्तव्यः प्रमाणं यद्यहं तव ॥
तमब्रवीदोघवती तदा मूर्ध्नि कृताञ्जलिः ।
न मे त्वद्वचनात् किञ्चिन्न कर्तव्यं कथञ्चन ॥
 
ஓ அரசனே! அவன், 'க்ருஹஸ்தனாயிருந்தே நான் ம்ருத்யுவை
ஜயிக்கின்றேன்' என்று ப்ரதிக்ஞை செய்தான். பிறகு, அந்த
ஸுதர்சனன் அந்த ஒகவதியைப் பார்த்து வருமாறு சொன்
னான். 'ஒருகாலும் அதிதிக்கு ப்ரதிகூலத்தைச் செய்யாதே.
அதிதி எதனால் ஸந்தோஷப்படுவானோ அதைச் செய். உன்
தேஹத்தைக் கொடுப்பதானாலும் அதைச் செய்.
ஸந்தேஹப்படவேண்டாம். இந்த வ்ரதம் எப்பொழுதும் என்
க்ருஹஸ்தர்களுக்கு
 
மன எதில் சுற்றிக்கொண்டிருக்கிறது.
 
மன
 
அதிதியைவிடச் சிறந்ததொன்றுமில்லை. ஒ சோபனே! உனக்கு
என் வார்த்தை ப்ரமாணமாகில், என் வார்த்தையைக் கவனமாய்
தில் எப்பொழுதும் தரித்திரு.நான் வெளியிற் சென்றிருந்த
போதும், வீட்டிலிருக்கும் போதும் அதிதியை அவமதிக்காதே,
நான் ப்ரமாணமாகில்' என்றான். அப்பொழுது ஓகவதீ தலையில்
அஞ்சலி பந்தத்தைச் செய்து, 'உம்முடைய வார்த்தையினால்
செய்யக்கூடாதது ஒன்றுமே எனக்கில்லை' என்றாள்.