This page has been fully proofread once and needs a second look.

देवतातिथिभृत्यानां श्वश्रूश्वशुरयोस्तथा ।
शुश्रूषणपरा नित्यं सततं संयतेन्द्रिया ॥
सा ब्राह्मणं तदा दृष्ट्वा संस्थितं भैक्षकांक्षिणम् ।
कुर्वती पतिशुश्रूषां सस्माराथ शुभेक्षणा ॥
व्रीडिता साऽभवत् साध्वी तदा भरतसत्तम ।
भिक्षामादाय विप्राय निर्जगाम यशस्विनी ॥
 
ब्राह्मण उवाच– किमिदं भवति त्वं मां तिष्ठेत्युक्त्वा वरांगने ।
उपरोधं कृतवती न विसर्जितवत्यसि ॥
 
मार्कण्डेय उवाच-
ब्राह्मणं क्रोधसन्तप्तं ज्वलन्तमिव तेजसा ।
दृष्ट्वा सा स्त्री मनुष्येन्द्र सांत्वपूर्वं वचोऽब्रवीत् ॥
स्त्री उवाच- क्षन्तुमर्हसि मे विद्वन् भर्ता मे दैवतं महत् ।
स चापि क्षुधितः श्रान्तः प्राप्तश्शुश्रूषितो मया ॥
 
தேவர்கள். அதிதிகள், வேலைக்காரர்கள் எல்லோருக்கும்
அனுகூலமாகியவள், மாமனார் மாமியார் இவர்களுக்குப் பணிவிடை
செய்பவள், எப்பொழுதும் இந்த்ரியங்களை அடக்கியவள், அவள்
பதிசுச்ரூஷை செய்யும்போது ப்ராம்ஹணனைப் பார்த்தாள்.
பிக்ஷைக்காகக் காத்திருப்பதாய்ப் பிறகு நினைத்தாள்.
அப்பதிவ்ரதை வெட்கமடைந்தாள். உடனே பிக்ஷையை எடுத்துக்
கொண்டு வெளியில் வந்தாள்.
 
ப்ராம்ஹணன் சொல்வதாவது.--தாயே! பெண்மணியே!
இது வென்ன? நீ என்னை இரு என்று சொல்லிவிட்டுத் தடங்கல்
<flag></flag>செய்தாய். என்னை அனுப்பாமலிருக்கிறாய்.
 
<flag></flag>மார்க்கண்டேயர் சொல்லுகிறார்:- ஓ அரசனே! கோபத்தால்
தேஜஸ்ஸால் எரிகின்றவன் போன்ற ப்ராம்ஹணனைப்
<flag></flag>பார்த்து அந்த ஸ்த்ரீ ஸமாதானபூர்வமாய்ச் சொல்லலுற்றாள்.
 
<flag></flag>சாஸ்த்ரீ சொல்வதாவது:- ஒ வித்வானே! பொறுக்கவேண்டும்.
<flag></flag>எனக்குப் பர்த்தா பெரிய தைவதம். அவர் பசியுடையவராய்க்
<flag></flag>களைத்தவராய் வந்தார். அவருக்குப் பணிவிடை செய்தேன்.