This page has not been fully proofread.

162
 

 
शरणागतस्य कर्तव्य मातिथ्यमिह यत्नतः ।
पञ्चयज्ञप्रवृत्तेन गृहस्थेन विशेषतः ॥
पञ्चयज्ञांस्तु यो मोहान करोति गृहाश्रमी ।
तस्य नायं न च परो लोको भवति धर्मतः ॥
तत् ब्रूहि त्वं सुविस्रब्धो यं त्वं वाचा वदिष्यसि
तं करिष्याम्यहं सर्व मा त्वं शोके मनः कृथाः ॥
तस्य तद्वचनं श्रुत्वा शकुनेर्लुब्धकोऽब्रवीत् ।
बाधते खलु मां शीतं हिमत्राणं विधीयताम् ॥
एवमुक्तस्ततः पक्षी पर्णान्याहृत्य भूतले ।
यथा शुष्क/णि यत्नेन ज्वलनार्थं द्रुतं ययौ ।
स गत्वाऽऽङ्गारिकस्थानं गृहीत्वाऽग्निमथागमत् ।
ततः शुष्केषु पर्णेषु पावकं सह्यदीपयत् ॥
स दीप्तं सुमहत् कृत्वा तमाह शरणागतम् ।
प्रतापय सुविस्रब्धं स्वगात्राण्यकुतोभयः ॥
 
எங்கள் வீட்டை அடைந்திருக்கிறீர். பஞ்ச யஜ்ஞங்கள் செய்யும்
க்ருஹஸ்தன், தன் வீட்டிற்கு வந்தவனுக்கு அதிதிபூஜையை
அவச்யம் செய்யவேண்டும். எந்த க்ருஹஸ்தன், அறியாமையால்
பஞ்சமஹாயக்ஞங்களைச் செய்வதில்லையோ, அவனுக்கு இவ்
வுலகுமில்லை, தர்மத்தால் கிடைக்கவேண்டிய பரலோகமுமில்லை.
ஆகையால் நீர் கபடமற்றுச் சொல்லும். நீர் சொல்லுவதை எல்
லாம் செய்கிறேன். வருத்தப்படவேண்டாம். இவ்விதம்சொல்லிய
பக்ஷியின் வார்த்தையைக் கேட்டு, வேடன் சொல்லலுற்றான்.
 
என்னைக் குளிர் வருத்துகின்றதே.இதிலிருந்து என்னைக்
காத்தல் செய்வாய் என்றான். இவ்விதம் சொல்லப்பட்ட பறவை
அங்குமிங்கும சென்று காய்ந்த இலைகளைப் பொறுக்கிக்கொண்டு
வந்து, பிறகு நெருப்புக்காக வேகமாய்ச் சென்றது. அது கரி
களால் வேலை செய்யுமிடம் சென்று, நெருப்பை எடுத்துவந்தது
பிறகு, காய்ந்த சரகுகளில் நெருப்பை மூட்டியது. மிகப் பெரிய
தாய் ஜ்வலிக்கச் செய்து, அவ் வேடனை நோக்கி, 'பயமில்லாமல்
இஷ்டப்படி அங்கங்களைக் காய்ச்சிக்கொள்ளுங்கள்' என்றது. அப்