This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
95
 
ரணமாக கிளிகளைப் பிடிப்பதற்கு அவற்றிற்குப் பிரியமுள்ள ஒரு
ஸாமானை அவற்றினெதிரில் வைத்து அதைத்தின்ன அவைவரும்
போது பிடிப்பது வழக்கம். கிளிகளுக்கு கோவைப்பழத்தில்
ப்ரியமதிகமென்று மன்மதனுக்குத் தெரியுமாகையால் அம்பிகை
யின் உதடாகிற கோவைப்பழத்தை வைத்து அந்தக் கிளியைப்
பிடிக்க மன்மதன் ஏற்பாடு செய்ததாக இங்கு வர்ணிக்கப்பட்டது
அம்பிகையின் கழுத்து கிளிக்கூட்டுக்கும், குரல் கிளியின் குரலுக்
கும், அதரம் கோவைக்கனிக்கும் உபமிக்கப்பட்டிருக்கின்றன.
 
2. சம்பராஸுரன் என்ற மிகவும் மாயாவியான அஸூ மரனை
ஸம்ஹாரம் செய்ததால் மன்மதனுக்குச் சம்பராரியென்று பெயர்.
இப்படி எல்லாரையும் விட மாயாவியாயும் ஸகல ஜனங்களுடைய
மனதையும் மயக்கிக் கலக்குகிறவனுமான மன்மதனே அம்பாளு
டைய குரலின் இனிமையைப்பார்த்து மயக்கமடைந்தானென்றால்
அதைப்பற்றி அதிகமாக வர்ணிக்கவேண்டியது அனாவச்யம்.
மேலும், அப்பேர்ப்பட்டவன் வைக்கும் கோவைப்பழமானது
ஸாமான்யமானதாக இருக்கக்கூடியதல்லவாகையால் அம்பிகையின்
அதரத்தினழகைப்பற்றியும் அதிகம் சொல்லத்தேவையில்லை.
 
3.ரதனம் என்றால் பல். அதற்கு ஆடையாக இருப்பது
கதநாரம்பம் உதடு.
 
4. அம்பிகையின் கழுத்து, குரல், அதரம் இவற்றின்
அழகைப்பற்றி ஸ்ரீமதாசார்யாளும் மிகவும் விசேஷமாக 'ஸௌர்
தர்யலஹரீ'யில் வர்ணித்திருப்பதையும் பார்க்கவும்.
 
जय जय जगदम्ब शिवे जय जय कामाक्षि जय जयाद्रिसुते ।
जय जय महेशदयिते जय जय चिगनकौमुदीधारे ॥ १०० ॥
ஜய ஜய ஐகதம்ப சிவே
 
ஜய ஜய காமாக்ஷி ஜய ஜயாத்ரிஸுதே।
ஜய ஜய மஹேச தயிதே
 
ஜட ஜய சித்ககந கௌமுதி தாரே ॥
ஜகதம்ப - ஜகன்மாதாவே! சிவே - பரமசிவனுடைய பத்னியே
ஜயஜய - ஸர்வோத்கர்ஷமாக (என்முன்) விளங்கிக்கொண்டிருக்
கவும், காமாக்ஷி -ஹே காமாக்ஷி! அத்ரிஸுதே -பர்வதராஜன்
பெண்ணே! (ஜயஜய) மஹேசதயிதே -பரமேச்வரனுடைய