This page has not been fully proofread.

92
 
மூகபஞ்சசதீ
 
ஸத்க்ருத தேசிக சரணா:
 
ஸபீஜ நிர்பீஜ யோக நிச்ரேண்யா ।
அபவர்க ஸௌத வலபிம்
 
ஆரோஹந்த்யம்ப கேzபி தவக்ருபயா 11
 
அம்ப - ஜகன் மாதாவே! ஸத்க்ருத தேசிக சரணா: குருநாத
ருடைய பாதங்களைப் பூஜித்தவர்களான, கே அபி - சில பாக்கிய
சாலிகள், ஸபீஜ நிர்பீஜாயோகநிச்ரேண்யா- ஸபீஜயோகம், நிர்பீஜ
யோகம் என்ற மாடிப்படிகள் வழியாக, அபவர்க ஸௌதவலபிம்-
மோக்ஷமென்ற மாளிகையின் உச்சிமாடிக்கு, தவ க்ருபயா - உன்
னுடைய அனுக்ரஹத்தினால், ஆரோஹந்தி - ஏறுகிறார்கள்.
 
1. இதில் பக்தர்கள் யோகாப்யாஸத்தின் மூலமாக அம்பி
கையை உபாஸித்து பரம புருஷார்த்தமான மோக்ஷத்தையடைவ
தாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முக்யமான ஒத்தாசையானது
குருவின் உபதேசமாதலால் அது இங்கு
இங்கு 'ஸத்க்ருத தேசிக
சரணா:' என்று சொல்லப்பட்டது.
 
மோக்ஷ
 
2.ஸௌதமென்றால் பலமாடிகளையுடைய மாளிகை யென்
றர்த்தம். வலபீ என்றால் அப்பேர்ப்பட்ட மாளிகையின் மாடி
கள் எல்லாவற்றிற்கும் மேலான மாடியென்றர்த்தம்.
மானது பல மாடிகளுடைய
ய மாளின கையாக 'அபவர்கஸௌத
மென்று இங்கு சொல்லப்பட்டது. மோக்ஷமென்பது ஸாலோக்
யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம், கைவல்யம் என்று
மெம்மேலான ஐந்து மாடிகளில் எல்லாவற்றிற்கும் மேலானதான
கைவல்ய மோக்ஷம் "அபவர்கஸௌ தவலபி" என்று இங்கு
சொல்லப்பட்டது.
 
.
 
3. இப்பேர்ப்பட்ட மாளிகையிலுள்ள மாடிகளை ஏறுவதற்
காக ஏற்பட்ட (நிச்ரேணீ) மாடிப்படிகளாக யோகம் சொல்லப்
பட்டது. யோகமானது ஸோபானக்ரமமானதாக (படிப்படியான
தாக) சொல்லப்படும். அப்படி படிப்படியாக ஏறிவரும்போது
முடிவாக ஸ்பீஜயோகமென்ற ஸம்ப்ரக்ஞாத ஸமாதியானது ஏற்
படுகிறது. பீஜமென்பதினால் பூர்வ கர்மாக்களின் ஸம்ஸ்கார
வசத்தால் ஏற்படும் விருத்தியானது குறிப்பிடப்பட்டது. இது
ஸம்ப்ரக்ஞாத ஸமாதிகாலத்திலுமிருப்பதால் அதை ஸ்பீஜயோக
மென்று சொல்லப்பட்டது. அதற்கு மேலாக அவ்விதமான
வருத்தியும் அற்றுப்போய், கர்ம ஸம்ஸ்காரங்கள் இருந்ததும்