This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
ஸர்வோத்தர - எல்லாவற்றிற்கும் மேல்பட்டதுமான், காகமல
தளம் - ஸஹஸ்ரதள கமலத்தை, கச்சஸி - அடைகிறாய்.
 
1. இங்கு குண்டலினீ ரூபிணியான அம்பிகையானவள்
ஷட்சக்ர பேதநம் செய்து ஸஹஸ்ரார கமலத்திற்குப் போவது
சொல்லப்பட்டது. இதைப்பற்றி ஸ்ரீ மதாசார்யாள் 'ஸௌந்தர்ய
லஹரி"யில்,
 
'மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்திதம் ஸ்வாதிஷ்டாநே ஹ்ருதி மருதமாகாசமுபரி ।
மநோ zபி ப்ருமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே !!'
 
91
 
என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த வரிசையை அனுஸரித்து
ஷட் சக்ரங்கள் (அவற்றின் தளங்களுடைய கணக்கைச்சொல்லி)
இங்கு சொல்லப்பட்டிருக்கின்றன.
 
2. இந்த (ஷட்) சக்கங்களை கமலங்களென்றும் சொல்லு
வது வழக்கம். அப்படிச் சொல்லுகையில் மூலாதாரத்திற்கு
நான்கும், மணிபூரகத்திற்கு ஆறும், ஸ்வாதிஷ்டானத்திற்குப்
பத்தும், அனாஹதத்திற்கு பனிரெண்டும், விசுத்திக்கு பதினாறும்
ஆக்ஞாவுக்கு இரண்டும், தளங்களிருப்பதாகச் சொல்லப்படும்.
 
3. ஜலதியென்றால் ஸமுத்ரம் என்று அர்த்தம். ஸமுத்ரங்
களை ஸாதாரணமாக (சதுஸ்ஸாகர,சதுஸ்ஸமுத்ர என்று நான்கு
என்று சொல்லப்படுவதால்) ஜலதி என்பது நான்கைக்குறிக்கும்.
ஹுதவஹு -அக்னி.
அக்னியானது கார்ஹபத்யம், ஆஹவ
நீயம் தக்ஷிணாக்னி என்று மூன்றாகையால், ஹு தவஹம் என்
பது மூன்றைக் குறிக்கும். அதை தவிகுணிதமாகச் செய்தால்
(இரண்டால் பெருக்கினால்) ஆறு. திக்குகள் பத்து என்று
சொல்லப்படுவதால் திசா என்ற பதமானது பத்தைக் குறிக்கும்.
தினேசர்கள் (ஸுபர்யர்கள், ஆதித்யர்கள்) பன்னிரெண்டு பெயர்
 
ளன்று சொல்லப்படுவதால் தினேச என்ற பதமானது பன்னி
ரெண்டைக் குறிக்கும். அச்வினீ தேவர்கள் இருவர்களாகையால்
ஆச்வினேய என்ற பதமானது இரண்டைக்குறிக்கும்.
"aat 48னாகாரதயு என்றும் பாடம்.
 
1
 
सत्कृतदेखि त्वरणा: सचीजनिर्बीजयोगिनिश्रेण्या ।
 
अपवर्गसौधवलभिमा रोहन्त्यम्च कोऽपि तव कृपया ॥ ९७ ॥