This page has not been fully proofread.

88
 
மூகபஞ்சசதீ
 
அம்பிகையின் மூன்று ரூப விசேஷங்கள் வர்ணிக்கப்பட்டிருக்
கின்றன. இந்த சலோகத்தில் அம்பிகை சாரதா ரூபிணியாக
வர்ணிக்கப்பட்டாள்.
 
कुङ्कुमरु/चपिङ्गमसृक्पङ्किलमुण्डालि मण्डितं मातः ।
 
जयति तव रूपधेयं जपपटपुस्तकवरामयाब्जकरम् ॥ ९३ ॥
குங்குமருசி பிங்கம் அஸ்ருக்-
பங்கில முண்டாலி மண்டிதம் மாத:
ஜயதி தவ ரூபதேயம்
 
ஜப்பட புஸ்தக வராபயாப்ஜகரம் Ii
 
மாத:தாயே! குங்குமருசிபிங்கம்-குங்குமம்போல் சிவந்த
நிறத்தையுடையதும், அஸ்ருக் பங்கில - ரத்தம் வழிந்து அழுக்
கானதுமான, முண்ட அலி மண்டிதம் - (தலை) முண்டங்களின்
வரிசையால் அலங்கரிக்கப்பட்டதும், ஜபபட புஸ்தக வராபயாப்ஜ
கரம் - ஜபமாலை, புஸ்தகம், வரதமுத்ரை, அபயமுத்ரை, இவை
களையுடைய கராப்ஜங்களுடையதுமான, தவ ரூபதேயம் - உன்னு
டைய ரூபமானது, ஐயதி - ஸர்வோத்கர்ஷமாக விளங்குகிறது.
 
-
 
-
 
இதில் அம்பிகையின் த்ரிபுரா என்ற ரூப விசேஷமானது
வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரூபத்தைப்பற்றி "ப்ரபஞ்ச
ஸாரத்தில்'' சொல்லப்பட்டிருப்பது பின்வருமாறு:-
'ஆதாம்ரார்க்காயுதாபாம் கலித சசிகலா ரஞ்சிதப்தாம் த்ரிநேத்ராம்
தேவீம் பூர்ணேந்து வக்த்ராம் வித்ருத ஜபவடீ புஸ்தகாபீத்ய
 
பீஷ்டாம் ।
 
பீநோத்துங்க ஸ்தநார்த்தாம் வலிலஸித விலக்நாமஸ்ரூக் பங்கராஜந்
முண்டஸ்ரங் மண்டிதாங்கீம் அருணதரதுகூலாஙலேபாம் நமாமி!।
 
कनकमणि कलितमूषां कालायस कलहशीलकान्तिकलाम् ।
कामाक्षि शीलये त्वां कपालशूलाभिरामकरकमलाम् ॥ ९४ ॥
கநக மணி கலித பூஷாம்
 
காலாய்ஸ கல்ஹ சீல காந்திகலாம் ।
காமாக்ஷி சீலயே த்வாம்
 
கபால சூலாபிராம கரகமலாம் ॥