This page has not been fully proofread.

ஸ்ரீ காமாக்ஷ்யை நம:
 
மூகபஞ்சசதி
 
99
 
ஆர்யா சதகம்.
 
कारणपरचिद्रूपा काञ्चीपुरसीनि कामपीठगता ।
 
काचन विहरति करुणा काश्मीरस्तबककोमलाङ्गलता ॥ १ ॥
 
காரண பரசித்ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீடகதா
காசன விஹரதி கருணா காச்மீர ஸ்தபக கோமளாங்
[கலதா II
 
காரண பரசித்ரூபா -காரணபரசித் ரூபிணியும், காஞ்சீபுர
ஸீமனி - காஞ்சீபுரத்தின் எல்லைக்குள் (காஞ்சீபுரத்தில் இருக்கும்)
காமபீடகதா - காமகோடி பீடத்திலிருப்பவளும், காச்மீரஸ்தபக
கோமளாங்கலதா - குங்குமப்பூவின் கொத்துபோல் ம்ருதுவான
சரீரத்தையுடையவளுமான, காசன்-ஏதோ ஒரு (வர்ணனையிலடங்
காத), கருணா -கருணா ரூபியானவள், விஹரதி - விளையாடிக்
கொண்டிருக்கிறாள்.
 
1. சித் என்றால் ஞானம், உணர்ச்சி என்றர்த்தம்.
 
2. நிஷ்களமும் நிருபாதிகமுமான பரப்ரம்ஹமானது பரா
ஸம்வித்ரூபமானது. இதையே தான் பரசித்ரூபமென்று சொல்
லப்படும். இப்படியிருக்கும்போது அது யாதொரு விதமான
உணர்ச்சியாவது நினைவாவது இல்லாத நிலையோடிருக்கும்.
அதற்கு அஹம் (நான்) என்றாவது, இதம் (இது, அதாவது தன்னை
தவிர்த்ததான ஒன்று)
என்றாவது பாவங்கள் தனியாக அப்போது
கிடையாது. அதாவது, அவ்விரண்டு பாவங்களும் இரண்டறக்
கலந்து அவற்றுள் பாகுபாடில்லாமல் இருப்பது (நிர்குண) பர
ப்ரம்ஹத்தின் ஸ்வரூபம்.
 
3. இதையே தான் சிவசக்தி ஸாமரஸ்யமான ரூபமென்று
சொல்லப்படும். இவையிரண்டில் சிவனென்பது பரப்ரம்ஹத்தின்