This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
தரித்தும், வேடஸ்த்ரீ வேஷம்பூண்ட அம்பிகையுடனும் நாய்கள்
வேஷமுடைய நான்கு வேதங்களோடும் மற்றும் கிராதர்களுக்
குரிய சின்னங்களோடும் அவ்விடம் ஆவிர்பவித்ததும், அப்
போது அவருக்கும் அர்ஜுனனுக்கும் யுத்தம் நடந்ததும், பிறகு
அவர் அவனுக்கு பாசுபதாஸ்த்ரத்தை அளித்ததும், மஹாபார
தத்திலும் கிராதார்ஜூ னீயத்திலும் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன.
அந்த ஸமயம் அம்பிகைகொண்ட வேடஸ்த்ரீ வேஷம் இதில்
வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இங்குச்சொல்லப்பட்ட ஆடையாபர
ணங்களெல்லாம் வேடஸ்த்ரீகள் வழக்கமாக அணிந்துகொள்வதே.
2. அம்பிகையின் சபரீ ரூபம் பின்வருமாறும் வர்ணிக்
கப்பட்டிருக்கிறது:
 
'பர்ஹாவதம்ஸயுத பர்பர கேசபாசாம்
குஞ்ஜாவளீக்ருத காஸ்தந ஹாரசோபாம் ।
சயாமாம் ப்ரவாளவா ஸுகுமாரஹஸ்தாம்
த்வாமேவ நௌமி சபரீம் சபரஸ்ய ஜாயாம் ॥•
 
81
 
'லுடத் குஞ்ஜாஹார ஸ்தநபரநமந் மத்யலதிகாம்
உதஞ்சத் கர்மாம்ப: கண குணித வக்த்ராம்புஜருசம் ।
சிவம் பார்த்தத்ராண ப்ரவண ம்ருகயாகாரகுணிதம்
சிவாம் அந்வக் யாந்தீம் சபரமஹம் அந்வேமி சபரீம் ॥'
ஸகல ஜனனீ ஸ்தவம்)
 
மாகந்த தரும பல்லவாருணபடீம் பூர்ணேந்து பிம்பாநநாம்
தேவீம் திவ்யமயிம் ப்ரஸந்ந ஹ்ருதயாம் த்யாயேத்
 
.
 
(அம்பாஸ்தவம்)
 

 
[கிராதாவ்ருதாம்।
 
பர்ஹாபீத கசாபிராமசிகுராம் பிம்போஜ்வலச் சந்த்ரிகாம்
குஞ்ஜாஹார லதாம்சுஜால விலஸத் க்ரீவாம் மதீரேக்ஷணாம்//
(ஆகாச பைரவ கல்பம்)
 
11
 
'ச்யாமாம் வன்ஹிகலாப சேகரயுதாம் ஆபத்த பர்ணாம்சுகாம்
குஞ்ஜாஹாரலஸத் பயோதரநதாம் அஷ்டாஹிபார் பிப்ரதீம் /
தாடங்காங்கத மேகலா குணரணந் மஞ்ஜீரதாம் ப்ராபி தாந்
கைராதீம் வரதாபயோத்யதகராம் தேவீம் த்ரிநேத்ராம்பஜே!!'