This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
மாலிநி மஹேச சாரிணி
 
காஞ்சீ கேலிநி விபக்ஷகாலிநி தே।
 
சூலிநி வித்ருமசாலி நி
 

 
ஸுரஜந் பாலிநி கபாலிநி நமோzஸ்து !!
 
77
 
மாலிநி - மாலினியாயும், மஹேச்சாரிணி - பரமசிவனுடைய
பத்னியாயும், காஞ்சீ கேலிநி - காஞ்சீபுரியில் விளையாடிக்கொண்
டிருப்பவளாயும், விபக்ஷகாலிநி - சத்ருக்களை ஸம்ஹாரம் செய்
பவளாயும், சூலிநி - சூலத்தைத் தரித்தவளாயும், வித்ருமசாலிநி
பவழம் போன்ற நிறத்துடன் விளங்குகிறவளாயும், ஸுரஜன
பாலிநி - தேவர்களைக் காப்பாற்றுகிறவளாயும், கபாலிநி - கபாலத்
தைக் கையில் வைத்திருப்பவளாயுமிருக்கும், தே - உனக்கு, நம:
அஸ்து நமஸ்காரம் இருக்கட்டும்.
 
மாலையைத் தரித்திருப்பதாலும், பஞ்சாசத் வர்ணங்களா
லான (அக்ஷரங்களாலான) மாலையை(வர்ணமாலையை) தரித்திருப்
பதாலும் (அதாவது அக்ஷர ஸ்வரூபிணியாக) இருப்பதாலும்
அம்பிகைக்கு மாலினீ என்று பெயர். அம்பிகை தனது
விசேஷங்களில் சூலம், கபாலம், இவற்றைக் கைகளில் தரித்திருப்
பதால் சூளின் என்றும், கபாலினீ என்றும் பெயர்கள் ஏற்பட்
பரமசிவனும் கையில் கபாலத்தைத் தரித்திருப்பதால்
அவருக்குக் கபாலியென்றும் அவருடைய பத்னியாகிய அம்பிகைக்
கும் கபாலினியென்றும் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லலாம்.
 
டன்.
 
என்பது
 
'"எத்தன எfjA" (மஹேசசாலிநி) என்ற பாடத்தில், பர
மேசுவரனையும் சலிக்கச் செய்பவளாயிருப்பவளே
பொருள்.