This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
வித்யே-(வித்யா ரூபிணியான) ஸரஸ்வதி ரூபத்தையுடைய
வளே, விதாத்ரு விஷயே - (அந்த ஸரஸ்வதீ ரூபத்தில்)ப்ரம்ஹா
வின் காந்தையாயிருப்பவளே, காத்யாயநி காளி காமகோடி கலே
பாரதி பைரவி பத்ரே சாகிகி சாம்பவி சிவே - காத்யாயனீ, காளீ,
காமகோடி, கலா, பாரதீ, பைரவி, பத்ரா,சாகினீ, சாம்பவி,
சிவா என்ற பெயர்களையுடையவளே, பவதீம்-உன்னை, ஸ்துவே-
ஸ்துதி செய்கிறேன்.
 
76
 
அம்பிகையானவள் தேவர்களுக்கு ஒத்தாசை செய்யவேண்டி
காத்யாயன மஹர்ஷியுடைய ஆச்ரமத்தில் ஆவிர்பவித்து அவரால்
தன் பெண்ணாக ஸ்வீகரிக்கப்பட்டதினால் காத்யாயனீ என்று
பெயர் ஏற்பட்டது. காளீ என்ற நாமம் அம்பாளுக்கு ஏற்பட்ட
தற்கு அனேகம் காரணங்களுண்டு. கருப்பு வர்ணமாய் இருப்
பதையும், காலத்திற்கு அதீதமாயிருப்பதையும் இந்தப்பெயருக்கு
இரண்டு காரணங்களாகச் சொல்லலாம். 'காலாத்மிகா' 'கலா
 
நாதா' 'கலாமாலா 'கலாவதீ' என்ற ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்
திய நாமங்களின் பாஷ்யத்தில் கலா என்ற பதத்திற்கு அனேக
அர்த்தங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகளின் ரூபமாக
அம்பிகையிருப்பதால் கலா என்ற பெயர் ஏற்பட்டது. வித்யா,
விதாத்ருவிஷயா, பாரதீ என்றவை ஸரஸ்வதியின் பெயர்கள்.
பைரவராகிய சிவனுடைய பத்னியாக இருப்பதாலும் பீருக்கள்
(ஸ்த்ரீகள்) ஸமூஹ ரூபமாயிருப்பதாலும் அம்பிகைக்கு பைரவி
என்ற பெயர் ஏற்பட்டது. மங்கள ரூபிணியாயும் மங்கள் ப்ரதை
யாயுமிருப்பதால் பத்ரா என்று பெயர். சாகினீ என்பது மூலா
தார பத்மத்திலிருக்கும் (அம்பிகையின் ரூபிணியான) யோகினிக்
குப்பெயர். தவிரவும் தேவீமாஹாத்ம்யம், தேவீபாகவதம் இவற்
றில் சொல்லப்பட்ட (அம்பிகா ரூபிணியான) சாகம்பரீ தேவியைக்
குறித்ததாகவும் சொல்லலாம். சாம்பவீ, சிவா என்பவை சம்பு,
சிவன் என்ற சிவனுடைய பெயர்களிலிருந்து ஏற்பட்டவை.
 
"QgfAaa Az" (வித்யே விதாத்ரு அவிஷயே)என்ற
பாடத்தில் சதுர்முக ப்ரம்ஹாவின் ஸிருஷ்டிக்கு அதீதமான
வித்யா ஸ்வரூபிணியே - என்பது பொருள்.
 
मालिनि महेशचारिणि काञ्चीकेलिनि विपक्षकालिनि ते ।
 
शूलिनि विद्रुमशालिनि सुरजनपालिनि कपालिनि नमोऽस्तु ॥ ७९ ॥