This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
காமபீட லாஸிகயா - காமபீடத்தில் நர்த்தனம் செய்கிற
வளும், காக்ரூபாம்பு ராசிகயா - கனீபூதமான கருணாரஸத்தின்
ஸமுத்தமாக விளங்குபவளும், ச்ருதியுவதி - வேதங்களாகிற யுவ
திகளின், குந்தளீ மணிமாலிகயா - கேசங்களில் அணிந்திருக்கும்
ரத்னங்களின் மாலைபோன்றவளும், துஹிந சைல பாலிகயா
 
மவானுடைய குமாரியாயுமிருக்கிற ஸ்ரீ காமாக்ஷியால், லக்ஷ்
யோரஸ்மி - பார்க்க (காப்பாற்ற)த்தக்கவனாயிருக்கிறேன்.
 
71
 
1. லாஸிகா என்பது நர்த்தனம் செய்யும் ஸ்திரீக்குப்பெயர்.
2. அம்பிகையானவள் ஸகல வேதங்களுக்கும் பரம தாத்
பயமாயிருப்பதால், வேதங்களை ஸ்திரீகளாகவும், அம்பிகையை
அவர்களுடைய சிரஸில் கேசங்களிலணிந்திருக்கும் ரத்னங்களின்
கோர்வையாகவும் இங்கு வர்ணிக்கப்பட்டன். அம்பிகையை
 
அந்த ஸ்திரீகள் இடைவிடாமல் நமஸ்கரிப்பதால் அவளுடைய
பாதங்களின் (செம்பஞ்சுக்குழம்பு கலந்ததால் சிகப்பாயிருக்கும்)
தூளிகள் அவர்களுடைய வகுட்டிலணியப்பட்ட ஸிந்தூரமாயிருப்
 
பதாக,
 
'ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீ க்ருத பாதாப்ஜ தூளிகா'
என்று ஸ்ரீ லலிதாஸஹஸ்ரநாம'த்தில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
 
लीये पुरहरजाये माये तव तरुणपल्लवच्छाये ।
 
चरणे चन्द्राभरणे काञ्चीशरणे नतार्तिसंहरणे ॥ ७२ ॥
 
லீயே புரஹரஜாயே
 
மாயே தவ தருண பல்லவச்சாயே ।
சரணே சந்த்ராபரணே
 
காஞ்சீசரணே நதார்த்திஸம்ஹரணே !!
 
புரஹா ஜாயே - முப்புரங்களையும் அழித்தவரான பரமசிவ
னுடைய பத்னியே, மாயே - மஹாமாயாரூபிணியே, தருணபல்
வைச்சாயே - இளந்துளிர் போன்ற (சிவந்த) காந்தியுடையவளே,
சந்த்ராபரணே ண் - சந்த்ரனை (சிரஸின்) ஆபரணமாக உடையவளே,
காஞ்சீ சரணே - காஞ்சீபுரியை வாஸஸ்தானமாக உடையவளே,
நதார்த்தி ஸம்ஹரணே - நமஸ்கரிக்கின்றவர்களுடைய கஷ்டத்
தைப் போக்குகிறவளே, தவ சரணே-உ உன்னுடைய பாதத்தில்,
லீயே - லயித்திருக்கிறேன்.