This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
ஸதநஸ்யோபரி தாஸாம் ஸர்வானந்தமய நாமகே பிந்தௌ
பஞ்சப்ரம்ஹாகாரம் மஞ்சம் ப்ரணமாமி மணிகணாகீர்ணம்!!'
 
70
 
இந்த மஞ்சத்திற்கு ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரன்,ஈச்வரன்
இந்நால்வரும் கால்களாயிருப்பதாகச் சொல்லப்படுவார்கள்.
பர்யங்கஸ்ய பஜாம: பாதாந் பிம்பாம்புதேந்துஹேமருச:
அஜஹரிருத்ரேசமயாந் அநலாஸுர மாருதேசகோண
 
ஸ்த்தாந் ॥'
இந்த மஞ்சத்திற்கு ஸதாசிவன் மேல் தட்டாயிருப்பதாகச்
சொல்லப்படும்.
 
'பலகம் ஸதாசிவமயம் ப்ரணௌமி ஸிந்தூர ரேணு கிரணாபம் ।"
 
மேலே சொல்லிய ஐவரும் தங்களுடைய சக்திகளோடு
இல்லாதிருக்கும்போது ப்ரேதங்களாக இருக்கிறபடியால் அவர்
களாலான கட்டிலானது 'பஞ்சப்ரேத மஞ்சம்' என்று சொல்லப்
படும். (இதைப்பற்றி அதிகமாகத் தெரியவேண்டுமானால் ஞானார்
ணவம் முதலியவற்றைப் பார்க்கவும்).
 
2. இந்த மஞ்சத்தைப் பொதுவாக 'மஞ்சே ஸதாசிவமயே
என்று இங்கு சொல்லியதுபோல் 'சிவாகாரே மஞ்சே' என்று
'ஸௌந்தர்யலஹரி'யிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
 
3. இப்பேர்ப்பட்ட மஞ்சத்தின்மீது காமேச்வாருடைய
வாமாங்கத்தில் அம்பிகை வீற்றிருப்பதால் அவ்விதமான அவரு
டைய (அழகியதும் புஷ்யம்போல் ம்ருதுவானதுமான) அங்க
மானது 'பரமசிவ மய லலித பௌஷ்ய பர்யங்கே' என்று இங்கு
சொல்லப்பட்டது. இதே மாதிரி ஸ்ரீ மதாச்சார்யாளும்,
 
'சிவாகாரே மஞ்சே பரமசிவ பாயங்க நிலயாம்'
என்று 'வௌந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக்கிறார்கள்.
लक्ष्योऽस्मि कामपीठी-लासिकया घनकृपाम्बुराशिकया ।
श्रुतियुवतिकुन्दलीमणि-मालिकया तुहिनशैलबालिकया ॥७१॥
 
லக்ஷ்யோzஸ்மி காமபீடி
 
லாஸிகயா கநக்ருபாம்பு ராசிகயா ।
ச்ருதியுவதி குந்தளீமணி-
மாலிகயா துஹிநசைல பாலிகயா ॥