This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
அம்பிகையின் தவத்திற்கு இடையூறு செய்யும்படிச் சொல்லவும்,
அப்படியே கங்கையானவள் பயங்கரமான ப்ரவாஹமாய் வந்து
அம்பிகை தவம் செய்யுமிடத்தை நெருங்கவும் அம்பாள் லிங்க
ரூபமாயிருக்கும் தன்பதிக்கு ஆபத்து நேரிடுமோவென்று பயந்து
கலங்கி வேறொன்றும் செய்வதற்குத்தோன்றாமல் தன் கைவளை
கள் பதியவும் இரு ஸ்தனங்கள் குழையவும் தன் பதியைக் கட்டி
ஆலிங்கனம் செய்தவுடன் அதினால் பரமானந்தமடைந்த பரமேச்
வரன் ப்ரஸன்னமாகி ப்ரவாஹத்தைத்தடுத்து அம்பிகையின் அபீ
ஷ்டத்தைக் கொடுத்ததாகவும் சொல்லப்படும். (இந்த நதியினால்
அம்பிகைக்கு கம்பம் (நடுக்கம்) உண்டான காரணத்தைக்
கொண்டு அதற்கு கம்பா என்று பெயர் ஏற்பட்டது.)
 
5
 
இங்குள்ள பரமசிவனுடைய லிங்க மூர்த்தியானது அம்பா
ளால் ஆலிங்கனம் செய்யப்பட்டபோது அம்பாளுடைய ஸ்தன,
கங்கணங்கள் அழுந்தியதினால் ஏற்பட்ட அடையாளங்களோ
டிருப்பதாகச் சொல்லப்படும்.
 
'உமாலிங்கன ஸங்க்ராந்த குசகங்கணமுத்ரிதம் ।
 
லிங்கம் ஏகாம்ரநாதஸ்ய ஸைகதம் ஸமுபாஸ்மஹே 11'
 
உபயை
 
இவ்விதமான லீலைகள் நடந்த புண்யக்ஷேத்ரமாகிய காஞ்சி
யில், பக்தகோடிகளுக்கு ஸமஸ்தமான காமங்களையும் கொடுக்கும்
கருணா ரூபிணியான ஜகன்மாதாவானவள் ஸ்ரீ காமாக்ஷி என்ற
அஸாதாரணமான நாமத்துடன் பக்தானுக்ரஹார்த்தமாக விளங்
கிக் கொண்டிருக்கிறாள். அப்பேர்ப்பட்ட பரதேவதையின் க்ரு
அடைவதற்கு மூக கவியால் அருளிச் செய்யப்பட்ட
இந்த 'பஞ்சசதீ' என்ற ஸ்தோத்ரமானது முக்யமான ஸாதன
மாகும். வாசிக்க வாசிக்க ஆனந்தத்தையும் அம்பிகையினிடம்
பக்தியையும் பெருகச்செய்யும் இந்ததிவ்யமான ஸ்தோத்திரத்தை
யாவரும் எளிதிலறியும் விதமாக தமிழில் மொழி பெயர்த்து
இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பக்தர்களனைவரும் இதை
வாசித்து மூககவியினுடைய பேருபகாரத்தினால் ஸ்ரீலலிதா மஹா
 
த்ரிபுரஸு வந்தரியாகிய ஸ்ரீ காமாக்ஷியின் ஸ்வரூப ஞானமடைந் ந்திது