This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
கொஞ்சம் மலர்ந்ததான, குஸும்ப - குங்குமப்பூவின், ஸம்ப்ருத-
சேர்க்கையான, ஆருண்யம் - சிகப்பு நிறத்தையுடையதும், நவ
தாருண்யம் - புதிதான (ஆரம்பித்ததான) யௌவனத்தையுடையது
மான, கிமபி காருண்யம் - ஏதோ ஒரு கருணாரூபிணியை, கம்பா
கடஸீம்நி - கம்பா நதிக்கரையில், கலயே - அறிகிறேன் (த்யானிக்
கிறேன்.)
 
1. ஜகத்தானது ஷட் (ஆறு வகையான) அத்வாக்களாய்
(வழிகளாய்) சித்ரூபிணியான அம்பிகையிடமிருந்து ஏற்படுகிறது
என்று சொல்லப்படுகிறது.
 
'வர்ண: கலா பதம் தத்வம் மந்த்ரோ புவநமேவ ச ।
இத்யத்வ ஷட்கம் தேவேசி பாதி த்வயி சிதாத்மநி ॥ '
 
>
 
67
 
2. இந்த ஆறு அத்வாக்களில் வர்ண, பத,மந்த்ரமென்ப
வைகள் வாக்கைச் சேர்ந்தவைகளென்றும், கலா, தத்வ, புவன
மென்றவைகள் அர்த்தத்தைச் சேர்ந்தவைகளென்றும், அந்த
வாக்கும் அர்த்தமும் முறையே ப்ரகாச, விமர்சாத்மகமான
வையென்றும், அவற்றிலிருந்து இந்த ஜகத்தானது ஏற்படுகிற
தென்றும் சொல்லப்படும்.
 
3. அம்பிகை இந்த ஆறு அத்வாக்களுக்கும் அப்பாலிருப்
பதை, 'ஷ்டத்வாதீத ரூபிணீ" என்று 'ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்
தில் சொல்லியிருக்கிறது.
 
அல்லது, காம, க்ரோத, லோப, மோஹ,மத,மாத்ஸர்
யங்களென்ற ஷட்ரிபுக்களை 'ஷடத்வா' என்ற பதத்தினால் குறிப்
பிட்டதாகவும் சொல்லலாம்.
அவை காட்டிலுள்ள மரங்கள்
மாதிரி மேலுக்குமேல் உண்டாவதால் அவற்றை ஒரு அரண்யத்
திற்கு ஸமானமாக வர்ணிப்பது வழக்கம். அம்பிகையின் அனு
க்ரஹம் ஏற்பட்டால் அவை நசித்துவிடுவதால் 'தக்த ஷடத்வா
ரண்யம்' என்று சொல்லப்பட்ட
 
5. இதேமாதிரி 'ஸகல ஜனனீஸ்தவ'த்திலும் வர்ணிக்கப்
பட்டிருக்கிறது.
 
'ஷடத்வாரண்யாநீம் ப்ரளய ரவி கோடி ப்ரதிருசா
 
ருசா பஸ்மீக்ருத்ய ஸ்வபத கமல ப்ரஹ்வ சிரஸாம் ।