This page has not been fully proofread.

66
 
மூகபஞ்சசதீ
 
குஸுமசர கர்வ ஸம்பத்-
கோசக்ரு,ஹம் பாதி காஞ்சிமத்யகதம்।
ஸ்தாபிதம் அஸ்மின் கதமபி
 
கோபிதம் அந்தர்மயா மநோரத்னம் ॥
 
ஸுமசர- புஷ்பங்களைப் பாணங்களாகக்கொண்ட மன்ம
தனுடைய, கர்வஸம்பத் - கர்வமாகிய தனத்தின், கோசக்ருஹம்-
பொக்கிஷமானது, காஞ்சிமத்யகதம் - காஞ்சீபுரியின் நடுவிலி
ருந்துகொண்டு, பாதி - விளங்குகிறது. அஸ்மின் ஸ்தாபிதம்-
அதில் ஸ்தாபிக்கப்பட்டதாயிருக்கும், மனோரத்னம் - என் மனோ
ரத்னமானது, மயா- என்னால், அந்த: - என் மனத்திற்குள்,
கதமபி கோபிதம் - எப்படியோ காப்பாற்றப்பட்டுவருகிறது.
 
காஞ்சிமத்யகதமான காமகோடி பீடமானது மன்மதனுடைய
கர்வத்திற்குக் காரணமாயிருக்கும் காமத்திற்கு பொக்கிஷம்போல்
விளங்குகிறதென்றும், அதில் ஸ்தாபிக்கப்பட்ட மூர்த்தியான
ஸ்ரீ காமாக்ஷியானவள் ஒரு ரத்னம்போல் தன் மனதில் விளங்கிக்
கொண்டு தன்னால் எப்போதும் காப்பாற்றப்பட்டு (அதாவது,
த்யானிக்கப்பட்டு) வருகிறாள் என்றும் கவியால் சொல்லப்பட்டது.
அவ்விதமான கோசக்ருஹத்திற்குள் ஸ்தாபிதமான (ஸ்ரீ காமாக்ஷி
யாகிற) ரத்னத்தைத் தான் கொண்டுவந்து தன் மனதிற்குள்
வைத்து எப்படியோ காப்பாற்றிவருவதாக வர்ணித்திருக்கிறார்.
 
அஸ்மிந் - அந்தப் பொக்கிஷத்தில், மநோரத்தம் - என் மன
தென்னும் ரத்னமானது, கதமபி - மிகவும் சிரமப்பட்டு, கோபி
தம் - பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் பொருள்
சொல்லலாம்.
 
दग्धषडध्वारण्यं दरदलितकुसुम्भसंभृतारुण्यम् ।
 
कलये नवतारुण्य कम्पातटसीम्झि किमपि कारुण्यम् ॥ ६६ ॥
தக்த ஷ்டத்வாரண்யம்
 
தரதளித குஸும்ப ஸம்ப்ருதாருண்யம்
கலயே நவ தாருண்யம்
 
கம்பா தடஸீம்நி கிமபி காருண்யம் !!
 
தக்த ஷடத்வாரண்யம் - ஆறு அத்வாக்களாகிய ஆபரண்
யத்தை எரித்ததும் (அதாவது, அவற்றைக் கடந்ததும்), தாதளித-