This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
1. முந்திய சலோகத்தில் அம்பிகை ஸ்ரீ வித்யாரூபிணியா
யிருப்பதைச் சொல்லிவிட்டு, இந்த ச்லோகத்தில் சப்தரூபிணியா
யிருப்பதைச் சொல்லுகிறார். சப்தமானது (வாக்கானது) பரா,
பச்யந்தீ, மத்யமா, வைகரீ என்று நான்கு வகைப்படும். நாத
மானது மூலாதாரத்தில் இருக்கும்போது பரா என்ற பெயரோடி
ருக்கும், அங்கிருந்து ஸ ஷுஷம்நா மார்க்கமாக மேலேவருகை
யில் ஸ்வாதிஷ்டானத்திற்கு வரும்போது பச்யந்தீ என்றும்,
அநாஹதத்திற்கு வரும்போது மத்யமா என்றும், அதற்கு
மேலாக விசுத்தி ஸ்தானமான கண்டத்தின் மூலமாய் வெளி
வரும்போது மத்யமா என்றும் பெயர்கள்.
 
61'
 
'மூலாதாரே ஸமுத்பந்ந: பராக்யோ நாத ஸம்பவ:
 
ஸ ஏவோர்த்வதயாநீத: ஸ்வாதிஷ்டாநே விஜ்ரும்பித: //
பச்யந்த்யாக்யாம் அவாப்நோதி ததைவோர்த்வம் சநை:சநைட:/
அநாஹதே புத்தி தத்வ ஸமேதா மத்யமாபித://
ததா தயோர்த்வ நுந்நஸ் ஸந் விசுத்தெள கண்டதேசத:
வைகர்யாக்ய:
 
}/"
 
தையே ஸ்ரீமதாசார்யாளும்,
 
'மூலாதாராத் ப்ரதமமுதிதோ யச்ச பாவ: பராக்ய:
பச்சாத் பச்யந்த்யத ஹ்ருதயகோ புத்தியுக் மத்யா மாக்ய: ।
வ்யக்தே வைகர்யத ருருதிஷோஸ் தஸ்ய ஜந்தோ:
 
[ஸுஷூம்நா
பக்தஸ் தஸ்மாத் பவதி பவந ப்ரேரிதா வர்ணஸம்ஞா }!'
என்பதாக 'ப்ரபஞ்சஸாரத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
 
2. இந்த வைகரீ என்ற வாக்கானது நாம் ஸாதாரணமாகப்
பேசுவது. இதையே தான் வாக்கென்று தெரியாதவர்கள் சொல்
வார்களே தவிர, அறிஞர்கள் வாக்கானது மேலே சொல்லியபடி
நான்குவகைப்பட்டதென்றும் அவற்றில் கடைசியானது தான்
வைகரீ வாக்கென்றும் சொல்லுவார்கள்.
 
'சத்வாரி வாக் பரிமிதா பதாநி
 
தாநி விதுர் ப்ராஹ்மணா யே மரீஷிண: ।
குஹா த்ரீணி நிஹிதா நேங்கயந்தி
 
துரீயம் வாசோ மனுஷ்யா வதந்தி !!'