This page has not been fully proofread.

1
 
1
 
58
 
மூகபஞ்சசதீ
 
आहितविलासननी-मा ब्रह्मस्तम्ब शिल्पकल्पनया ।
आश्रितकाञ्चीमतुला-माद्यां विस्फूर्तिमाद्रिये विद्याम् ॥ ५६ ॥
 
ஆஹித விலாஸ பங்கீம்
 
ஆப்ரம்ஹ-ஸ்தம்ப சில்ப கல்பநயா
ஆச்ரித காஞ்சிம் அதுலாம்
 
ஆத்யாம் விஸ்பூர்த்திம் ஆத்ரியே வித்யாம் ॥
 
ஆப்ரம்ஹ ஸ்தம்ப - ப்ரம்ஹா முதல் புழு முடிய எல்லா
ஜீவன்களையும், சில்ப கல்பநயா ஸ்ருஷ்டிப்பதனால், ஆஹித
 
விலாஸ பங்கீம்
 
செய்யப்பட்ட தன் லீலைகளின் பேதங்களை
 
யுடையவளும், ஆச்ரித காஞ்சீம் - காஞ்சீபுரியை அடைந்தவளும்,
அதுலாம் - ஒப்பற்றவளும், ஆத்யாம் விஸ்பூர்த்திம் - ப்ரம்ஹத்
தின் முதன் முதலான உணர்ச்சியாயிருப்பவளுமான, வித்யாம்-
வித்யா(ஞான) ரூபிணியை, ஆத்ரியே - ஆச்சயிக்கிறேன்.
 
-
 
1. அம்பிகையானவள் ஸகல ஜீவன்களுடைய ஸ்ருஷ்டிக்
கும் காரணமாயிருப்பதால் 'ஆப்ரம்ஹகீடஜரி' என்றும், 'ஆப்
சம்ஹாதி பிபீலிகாந்த ஜநநீ' என்றும் இங்கு சொல்லப்பட்டது
மாதிரி வர்ணிப்பது வழக்கம். ப்ரம்ஹா என்ற பதமானது ஸகல
ஜீவன்களுடைய ஸ்தூலசரீரங்களின் ஸமஷ்டி ரூபமான ஹிரண்ய
கர்ப்பரைக் குறிக்கும். ஜீவன்களுக்குள் முக்யமான அவரையும்,
ஜீவன்களில் கடைசியாக இருக்கும் புழு,எறும்பு முதலியவற்றை
யும் சொல்லியிருப்பதால் நடுவாக இருக்கும் ஸகல ஜீவன்களும்
சேர்த்துச் சொல்லப்பட்டார்கள். ஸ்தம்பமென்பது அதீந்த்ரிய
மானதும் (இந்த்ரியங்களுக்குத் தென்படாததும்),வைத்ய சாஸ்
த்ரங்களில் ககேருகம், மகேருகம் என்று இரு பெயர்களால்
சொல்லப்படுவதுமான புழுப்போன்ற ஜீவ விசேஷம்.
 
2. ப்ரளயகாலத்தின்போது (மறுபடியும் ஜனிக்கவேண்டிய)
ஸகல ஜீவன்களையும் தன்னிடம் அடக்கிக்கொண்டு ப்ரம்ஹ
மானது ஸ்வாத்மாராமமாய் இருக்கும்போது, அவ்விதமான
ஜீவன்களுடைய கர்ம வாஸனையால் திரும்பவும் ஸ்ருஷ்டியுண்
டாகவேண்டிய காலம் வந்தவுடன், அப்படி ஸ்ருஷ்டிக்கவேண்டு
மென்பதான ஒரு உணர்ச்சியானது ப்ரம்ஹத்தினிடம் உண்டா
கிறது. இதுவே ச்ருதியில் 'ஸோங்காமயத' என்பது முதலான