This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
ணியாகவும்,(ஸ்ரீ வரதராஜசென்ற) ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்வரூபிணி
யாயுமிருப்பதுடன் ஸ்ரீ காமகோடியில் ஸ்ரீ காமராஜ பீடத்தில்
பிலாகாச ரூபிணியாயும் விளங்கிக்கொண்டிருக்கிறாள்.
 
இந்த மஹாபிலமானது நாதபிந்து யுக்தமான பரமாகாச
ஸ்வரூபமென்றும், ப்ரம்ஹ சரீரமென்றும், ஜகத்காமகலாகார
மென்றும் பலவிதமான பெயர்களால் குறிக்கப்படும். அம்பாள்
பிலாகாச ஸ்வரூபிணியாயிருக்கையில் லோககண்டகனான பந்த
காஸ ரன் என்பவனை ஸம்ஹரிப்பதற்காக கன்யகாரூபமாய்
வெளியில் வந்ததும், அவனுடைய ஸம்ஹாரமானபிறகு அம்பிகை
யின் கட்டளையால் அந்த மஹாபிலத்தின் த்வாரத்தின் பேரில்
காயத்ரீ ஸ்வரூபமான மண்டபமானது தேவதைகளால் கட்டப்
பட்டு பிலத்திற்கு மறைவிடமாயிருப்பதும், மற்ற விஷயங்களும்
'ஸ்ரீ காமாக்ஷி விலாஸ த்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
 
'காயத்ரீ மண்டபாதாரம் நாபிஸ்தானம் புவ: பரம் ।
புருஷார்த்தப்ரதம் சம்போ: பிலப்ராந்தம் நமாம்யஹம் ]1'
 
இந்த பிலத்தில் ஆகாசரூபிணியாயிருந்த அம்பாளுடைய
உக்ரஸ்வரூபத்தை சமனம் செய்வதற்காக ஸ்ரீமதாசார்யா
ளால் ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டாபனம் செய்யப்பட்டு அம்பாள் அவ்
விடத்தில் ஆகர்ஷணம் செய்யப்பட்டு அங்கு ஸான்னித்யத்தோ
டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
 
முன்னொரு காலத்தில் கைலாஸத்தில் அம்பிகையானவள்
லீலையாகத் தன் பதியின் நேத்திரங்களைத் தன் கைகளால் மறைக்
கவும், அந்த ஒரு க்ஷணத்தில் லோகங்களிலெல்லாம் அந்தகார
மேற்பட்டு தத்தளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த பரமசிவன்
அம்பிகையின் மீது கோபிக்கவும், அதற்கு விமோசனமாக காஞ்சீ
புரியில் தன்னைக்குறித்து தவம் செய்து மீண்டும் தன்னை அடையு
மாறு சொல்லப்பட்ட தேவியானவள் அவ்விதம் காஞ்சிக்கு வந்து
கடினமான நியமத்தோடு ஆம்ர மாத்தினடியில் மணலைக்கொண்டு
லிங்க மூர்த்தியைக் கல்பித்து கடுந்தவமியற்றுகையில் அம்பிகை
யின் ப்ரேமாதிசயத்தின் அளவைக்கண்டானந்திக்க எண்ணங்
கொண்ட பரமேச்வசன் கங்கையையழைத்து ப்ரவாஹரூபமாய்