This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
1
 
ஆகவே இந்தக்காமகோடி க்ஷேத்திரத்தில் ஒருவன் மேலேசொல்
லிய காமங்களில் ஏதாவது ஒன்றையுத்தேசித்து உபாஸித்தாலும்
அவனுக்கு அந்தக்காமமானது கோடிமடங்காகக் கிடைப்பதுடன்
மற்ற புருஷார்த்தங்களும் கிடைத்து, கடைசியாக (காமகோடி
(யாகிய)ரோக்ஷமும் (அவன் உத்தேசிக்கவிட்டாலும்) அவனுக்குக்
கிடைக்கப்பெறுமென்று சொல்லப்படுவதால் அந்த க்ஷேத்திரத்
திற்குக் 'காமகோடி' என்று பெயர் ஏற்பட்டது.
 
52
 
*
 
1
 
'யத்ர காமக்குதோ தர்மோ ஜந்துநா யேந கேந வா ।
ஸக்ருத்வாபி ஸுதர்மணாம் பலம் பலதி கோடிச:
தேநேதம் காமகோடீதி பிஃத்வாரம் ப்ரஸித்திமத் ॥
 
அத காமஸ் த்ருதீயார்த்த: புருஷார்த்தேஷு விச்ருத: ।
தத் பரஸ்தாத் ச்ருதோ மோக்ஷ: கோடி சப்தேந சப்தித: //
காமகோடி ச்ருதோ மோக்ஷ: புருஷார்த்த, சதுர்த்தக:
அர்த்தோZதவா ச்ருத: காம: காமேசோ தநத : ஸ்ம்ருத: ।
தத்கோடிதா பீடசக்தி: காமகோடீதீ விச்ருதா I
 
7. அம்பிகையே அந்தக் காமகோடியெனப்படும் பிலாகாச
ஸ்வரூபிணியாயிருப்பதால் அந்தப்பெயரே அம்பிகைக்கும் ஏற்
பட்டதென்று சொல்லப்படும்.
 
8. அம்பிகையின் ரூபங்கள் ஸ்தூல, ஸூக்ஷ்ம,பரரூபங்க
ளென்ற மூன்றில் ஸ்தூலமென்பது கரசரணாதி அவயங்களையுடை
யது. ஸூக்ஷ்மமென்பது மந்த்ரமயமானது. பரமென்பது வாஸனா
மயமானது. திருமபவும் ஸூக்ஷ்மரூபமானது ஸூக்ஷ்ம,
ஸூக்ஷ்மதர, ஸமதமமென்பதாக மூன்று பிரிவையுடை
யது. ஸூக்ஷ்மமென்பது பஞ்சதசீ வித்யாரூபமானது. ஸ்ருக்ஷ்
மதரமென்பது காமகலாக்ஷரரூபமானது. ஸ-'ூக்ஷ்மதமமென்பது
குண்டலீனீ ரூபம்.
 
9. இந்தக் காமகலையானது மிகவும் ரஹஸ்யமானதால் அ
னுடைய விபரங்களைக் குருமுகமாகவே அறிந்துகொள்ளவேண்டி
பது. ஆயினும் அவைகளைக் காமகலாவிலாஸம், என்ற க்ரந்தத்தி
லும் பாஸ்கரராயர், ஆர்தர் ஏவலன் முதலான பெரியோர்கள்
எழுதிய க்ரந்தங்களிலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்-