This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
51
 
தப:ஸ்தாநம் பிலம் ஸூக்ஷ்மபரமம் வ்யோம தத் ஸ்ம்ருதம் /
ஆதிபௌதிக மர்மாங்கம் நாபிஸ்தாநம் புவ: பரம் ।
ததேவ ப்ரம்ஹண : சம்போ: சரீரமிதி கத்யதே ॥
லோகாநாம் வ்யங்க்ய சப்தத்வாத் நாபிரித்யபி ஸஜ்ஞிதம் ।
ஸ்ரீபுரஸ்ய த்ரிமூர்த்தீநாம் ஈச்வராணாம் திசாமபி ॥
லோகாநாம் மேருசைலஸ்ய கோருபாயாவநேரபி ।
நவத்வாரஸ்ய மார்க்கம் தம் பூயோநிஸ் தந் மஹாபிலம் ।!'
 
5. காமகோஷ்டம் (காமகோட்டம்) என்பது மேலேசொல்
லிய காமகோடியென்ற பில மடங்கிய பெரிய ப்ரதேசத்திற்குப்
பெயர். இது ருத்ரசாலைக்கும் விஷ்ணுசாலைக்கும் நடுவிலுள்ளது.
பெரிய நான்கெல்லையையுடையது. இதற்கு பஞ்சபாண நிகேதனம்
என்றும் பெயர் உண்டு. து காஞ்சியின் மத்ய ப்ரதேசம்.
 
ஸ்ரீ காமாக்ஷியின் ஆலயம் அடங்கியது. இங்கு எவர்கள் தங்கள்
இஷ்ட தேவதையின் மந்த்ரத்தை ஜபிக்கிறார்களோ அதற்குக்
கோடிமடங்கான பலனை அடைவார்களென்றும், காமங்களை
விரும்புவோர்கள் இவற்றைக் கோடிக்கணக்காக அடைவார்
களென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
 
'ஏதத் சதுர்திங்மத்யஸ்த்தம் பஞ்சபாண நிகேதநம் ।
தஸ்மாத் தத் காமகோஷ்டாக்யம் காஞ்ச்யாம் மத்யமபூதலம்
யோ ஜபேத் காமகோஷ்டோஸ்மிந் மந்த்ரமிஷ்டார்த்ததை
கோடிவர்ணபலம் ப்ராப்ய முத்திலோகம் ச கச்சதி II [வதம்
காமாநாம் வர்ணதாத்பர்யாத் தத்கோடி குணஸங்க்யயா ।
காமகோடீதி விக்யாதம் காமகோஷ்டதராதலம் !!'
 
6. மேலே சொல்லிய பில ப்ரதேசத்திற்குக் காமகோடி
யென்று பெயர் வந்ததற்கு அனேகம் காரணங்கள் சொல்லப்பட்
டிருக்கின்றன. காமம் என்ற பதமானது பொதுவாக விருப்பத்
தைக் (அதாவது, புருஷார்த்தத்தை) குறிக்கும்.
ஜனங்கள்
விரும்பும் புருஷார்த்தங்கள் தர்ம, அர்த்த,காம, மோக்ஷங்
களென்கிற நான்கு வகைப்பட்டனவாகச் சொல்லப்படும். இந்த
வரிசையில் காமத்திற்கு அடுத்தாற்போல் (அடுத்த கோடியாக)
மோக்ஷம் வருவதாலும், மோக்ஷமே (காமங்களுக்குள்) மற்ற புரு
ஷார்த்தங்களைவிட உத்க்ருஷ்டமானதாலும் (பரமகோடியாயிருப்
பதாலும்) காமகோடி என்ற பதமே மோக்ஷத்தையும் குறிக்கும்