This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
49
 
ஸ்ரீ காமாக்ஷி கடாக்ஷிகா: புருஷா: ஸ்ரீ காமாக்ஷியால் கடா
க்ஷிக்கப்பட்டவர்கள், விபிநம் - காட்டை, பவநம்- வீடாகவும்,
அமித்ரம் - சத்ருவை, மித்ரம் - ஸ்நேஹிதனாகவும், யுவதி பிம்
போஷ்டம் ச - யுவதிகளுடைய கோவைக்கனிபோன்ற அதரத்தை
யும்,லோஷ்டம் - ஒட்டாஞ்சல்லிபோலும், ஸமம் பச்யந்தி - ஸம
மாகப் பார்க்கிறார்கள். சிவ சிவ - அஹோ ஆச்சர்யம்!
 
அதாவது, ஸ்ரீ காமாக்ஷியின் கடாக்ஷம் பக்தன்
மீது பட்ட
வுடன் அவனுக்கு ஸமத்ருஷ்டி ஏற்பட்டு, வீடு, காடு என்றாவது,
மித்ரன், சத்ரு, என்றாவது, பேதமான பாவமில்லா தவனாக
ஆகிவிடுகிறானென்று சொல்லப்பட்டது. அவனுக்கு ப்ரியம்,
அப்ரியம் என்ற இரண்டு சித்த வருத்திகளும் இல்லாமல் போய்
விடுவதால் அவன் யுவதிகளுடைய பிம்பபலம்போன்ற அதரத்
தைக்கூட ஒட்டாஞ்சல்லிக்கு ஸமானமாக மதிப்பானென்று
சொல்லப்பட்டது.
 
कामपरिपन्थिकामिनि कामेश्वरि कामपीठमध्यगते ।
कामदुधा भव कमले कामकले कामकोटि कामाक्षि ॥ ४९ ॥
 
காம பரிபந்த்தி காமிநி
 
காமேச்வரி காம்பீட மத்யகதே
காம துகா பவ கமலே
 
காமகலே காமகோடி காமாக்ஷி ।!
 
காம பரிபந்த்தி காமிநி - மன்மதனுக்குச் சத்ருவான பரம
சிவனுடைய நாயகியாயும், காமேச்வரி - காமேச்வரி (லலிதாம்பிகா)
ஸ்வரூபிணியாயும், காமபீட மத்யகதே- காமராஜ பீடத்தின்
மத்தியிலிருப்பவளாயும்,கமலே-லக்ஷ்மீ ஸ்வரூபிணியாயும், காம
காமகோடி - காமகோடி
 
கலே
 
ஸ்வரூபிணியாயும்,
 
யென்ற பெயருள்ளவளாயுமிருக்கும், காமாக்ஷி - ஹே காமாக்ஷி
தேவியே! காமதுகா பவ -(என்னுடைய) விருப்பங்களைக்கொடுப்
பவளாய் ஆகுவாயாக.
 
.
 
காமகலா
 
1. அம்பிகை சிதக்னி குண்டத்திலிருந்து லலிதா தேவியாக
ஆவிர்பவித்த பிறகு தேவர்கள் அவளை விவாஹம் செய்ய
 
-7