This page has not been fully proofread.

46
 
மூகபஞ்சசதீ
 
பந்தோ யதி பவதி புந:
 
ஸிந்தோரம்ப:ஸு பம்ப்ரமீதி சிலா ॥
 
காமாக்ஷி - ஹே காமாக்ஷி தேவியே! தவ பத பூஜந்
பாதங்களைப் பூஜிப்பதினால் ஏற்படும், ஸந்தோஷ தரங்கிதஸ்ய-
ஸந்தோஷம் நிறைந்த, ஜந்தோ:-ப்ராணிக்கு (மனுஷ்யனுக்கு),
பந்த:- ஜன்ம (அல்லது கர்ம) ஸம்பந்தமானது, புந: பவதி யதி-
திரும்பவும் ஏற்படுமென்றால் (அது) ஸிந்தோ: அம்ப: ஹு -
ஜலத்தில், சிலா - கற்பாறையானது, பம்ப்ரமீதி - சுழலும் (என்று
சொல்வது மாதிரி ஆகும்).
 
அதாவது, ஜலத்தில் கற்பாறையானது மிதக்கிறது என்று
சொன்னால் எவ்வளவு அஸம்பாவிதமாயிருக்குமோ, அதேமாதிரி
அம்பிகையின் உபாஸனையிலீடுபட்டவனுக்கு புனர்ஜன்மம் உண்டு
என்று சொல்வது ஆகும் என்று தாத்பர்யம்.
 
कुण्डलि कुमारि कुटिले चण्डि चराचरसवित्रि चामुण्डे ।
गुणिनि गुहारणि गुझे गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि ॥
 
குண்டலி குமாரி குடிலே
 
சண்டி சராசர ஸவித்ரி சாமுண்டே ।
குணிநி குஹாரணி குஹ்யே
 
குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி 11
 

 
குண்டலி - குண்டலங்களை (அதாவது, தாடங்கங்களை) உடை
யவளும்,குமாரி - பால்யமான வயதுடையவளும் (அல்லது பாலா
ரூபிணியாயிருப்பவளும்),குடிலே - குண்டலினீஸ்வரூபமாயிருப்
பவளும்,சண்டி - சண்டிரூபிணியாயிருப்பவளும், (அல்லது மங்
களத்தைச் செய்பவளும்), சராசரஸவித்ரி - ஜங்கம ஸ்தாவரத்மக
மான ஸகல ஜகத்தையும் ஸ்ருஷ்டித்தவளும், சாமுண்டே -சாமுண்
டாரூபிணியாயிருப்பவளும், குணிநி - த்ரிகுணங்களோடிருப்பவ
ளும், குஹாரணி (மனதிலிருக்கும்) அந்தகாரத்தைப் போக்கடிப்
பவளும், குஹ்யே - ரஹஸ்யமான ஸ்வரூபத்தோடிருப்பவளும்,
குருமூர்த்தே - குரு ஸ்வரூபியாயிருப்பவளுமான, காமாக்ஷி
ஹே காமாக்ஷியே! த்வாம் நமாமி - உன்னை நமஸ்கரிக்கிறேன்.
 
-
 
-