This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
அம்பிகையின் உபாஸகர்களில் பரமசிவன் முதன்மையாகச்
சொல்லப்படுவர். இதனால் அவரை ஆதிகுரு, ஆதிநாதரென்று
சொல்வது ஸம்ப்ரதாயம். அம்பிகையை ப்ரதிபாதிக்கும் சாஸ்த்
ரங்களாகிய தந்த்ரங்கள் பரமசிவனால் தன்னுடைய இரு அம்சங்
களான சிவ, சக்தி ரூபங்களில் குரு, சிஷ்ய பாவத்தோடிருந்து,
வெளியிடப்பட்டனவாகச் சொல்லப்படுகிறது.
 
குரு சிஷ்ய பதே ஸ்தித்வா ஸ்வயமேவ ஸதாசிவ:।
ப்ரச்நோத்தர பதைர் வாக்யை: தந்த்ரம் ஸமவதாரயத் ॥'
குருமண்டலத்தைச் சொல்லும்போதும் 'ஸதாசிவஸமாரம்
பாம்' என்று சொல்வது வழக்கம்.
 
समया सांध्यमयूखः समया बुद्ध्या सदैव शीलितया ।
उमया काञ्चीरतया न मया लभ्येत किं नु तादात्म्यम् ॥
ஸமயா ஸாந்த்ய-மயூகை:
 
ஸமயா புத்யா ஸதைவ சீலிதயா
உமயா காஞ்சீ ரதயா
 
ந மயா லப்யேத கிம் நு தாதாத்ம்யம்!!
 
45
 
X
 
ஸாந்த்யமயூகை - ஸர்த்யாகாலத்து (ஸூஈர்ய) கிரணங்களுக்கு
மையா - ஸமானமான காந்தியையுடையவளும், மையா புத்யா
பேதமில்லாமல் ஸமமான புத்தியுடன், (அதாவது, அவ்விதமான
புத்தியுள்ளவர்களால்), ஸதைவ சீலிதயா - ஸதாகாலமும் உபா
ஸிக்கப்பட்டவளும், காஞ்சீரதயா - காஞ்சீபுரியில் ப்ரீதியுள்ள
வளாயுமிருக்கிற,உமயா- உமாதேவியோடு, தாதாத்மயம் - ஐக்ய
பாவனையானது (அல்லது, ஸாயுஜ்யமானது), மயா - என்னால் ந
லப்யேத கிம் நு - அடையப்படமுடியாததா?
 
இங்கு சொல்லப்பட்ட ஸம புத்தியைப்பற்றிப் பின்வரும்
50-வது சலோகத்தில் விஸ்தரிக்கப்படுகிறது.
 
जन्तोस्तव पदपूजन-सन्तोषतरङ्गितस्य कामाक्षि ।
 
बन्धो यदि भवति पुनः सिन्धोरम्भःसु बम्भ्रमीति शिला ॥ ४५ ॥
ஜந்தோஸ்தவ பதபூஜந்-
ஸந்தோஷ-தரங்கிதஸ்ய காமாக்ஷி