This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
बाघाकरी भवाब्धे-राघाराद्यम्बुजेषु विचरन्तीम् ।
आधारीकृतकाच बोधामृतवीचिमेव विमृशामः ॥ ४१ ॥
 
பாதாகரீம் பவாப்தே:
 
ஆதாராத்யம்புஜேஷு விசரந்தீம் ।
ஆதாரீக்ருத காஞ்சீம்
 

 
போதாம்ருத வீசிமேவ விம்ருசாம்:
 
பவாப்தே: - ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்திற்கு,பாதாகரீம்-
இடையூறைச் செய்பவளும், ஆதாராதி அம்புஐேஷு-மூலாதா
ரம் முதலான கமலங்களில், விசரந்தீம்-ஸஞ்சரிப்பவளும்,
ஆதாரீக்ருத காஞ்சீம் - காஞ்சீபுரியை வாஸஸ்தானமாக உடைய
வளும், போதாம்ருத வீசிம் ஏவ -ஞானாம்ருத (ஸமுத்ர)த்தின்
அலையாயிருப்பவளுமான ஸ்ரீ காமாக்ஷியையே, விம்ருசாம:
த்யானம் செய்கிறோம்.
 
... ஜன்மஜலதௌ
 
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி 11*
என்று 'ஸௌந்தர்யலஹரியிலும்
 
. de 04
 
48
 
1. 'பவாப்தே: பாதாகரீம்' என்பதினால் பக்தர்களை ஸம்
ஸாரமாகிற ஸமுத்ரத்திலிருந்து கரையேறச்செய்து விடுவிப்ப
வளாக அம்பிகையைப் பற்றிச் சொல்லப்பட்டது. இதேமாதிரி
ஆசார்யாளால்
 
'ஸம்ஸார பங்க நிர்மக்க ஸமுத்தாண பண்டிதா
என்று லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.
 
:*,
 
*
 
'மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்திதம் ஸ்வாதிஷ்டாநே ஹ்ருதி மருதம் ஆகாசமுபரி ।
மநோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே ॥
 
2. அம்பிகையானவள் குண்டலினீ ரூபிணியாய் மூலா
தாரம் முதலான ஷட் சக்ரங்களிலும் ஸஞ்சரிப்பது 'ஆதாராத்
யம்புஜேஷு விசரந்தீம்' என்பதால் இங்கு சொல்லப்பட்டது.
இதைவிரிவாக ஆசார்யாள் 'ஸௌந்தர்யலஹரி'யில் வர்ணித்திருக்
கிறார்கள்.