We're performing server updates until 1 November. Learn more.

This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
மூகரால் இயற்றப்பட்ட ஐந்நூறு (ச்லோகங்கள்) என்பதாக
இவருடைய ஸ்தோத்திரத்தை "மூகபஞ்சசதீ" என்று ஆதி
காலம் முதல் நாள் வரை ரயில் சொல்வது வழக்கமே தவிர,
ஸ்தோத்திரத்திற்கு வேறு பெயர் கிடையாது. இது நூறு நூறு
சலோகங்கள் கொண்டதாக ஐந்து சதகங்கள் அடங்கியது. அவற்
றின் பெயர்கள் ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், மந்தஸ்மித
சதகம், கடாக்ஷ சதகம், ஸ்துதி சதகம் என்பவை. முதலாவதும்
கடைசியதும் ஸ்ரீ காமாக்ஷியைப் பொதுவாக ஸ்தோத்திரம் செய்
கையில், பாக்கி மூன்றையும் முறையே ஸ்ரீ காமாக்ஷியினுடைய
பாதாரவிந்தத்தையும், புன்சிரிப்பையும், கடாக்ஷத்தையும் வர்ணிக்
கின்றன. ச்லோகங்களின் வருத்தங்களும் ஒவ்வொரு சதகத்
திற்கும் வெவ்வேறாக அமைந்திருக்கின்றன.
 
2
 
மூக கவியினுடைய வாக்கின் மாதுர்யமானது சலோகங்
களின் மூலத்தை வாசித்து அறிகின்றவர்களுக்குத் தான் தெரிய
வரும். பதங்களெல்லாம் ஜிலுஜிலென்று மிகவும் லலிதமாயும்
காதுக்கு இனிமையாயும் அமைந்திருப்பதுடன் அர்த்த பாவ
மானது பக்தியைப் பெருகச்செய்து அம்பிகையின் மனதிலுள்ள
கருணைக்கடலை கொந்தளிக்கும்படியாகச் செய்யக்கூடிய விதமா
யிருக்கிறது. ஒவ்வொரு சலோகத்திலும் ஸ்ரீ காமாக்ஷி, காம
கோடிபீடம், ஏகாம்ர நாதர், காஞ்சீ, கம்பாநதீ இம்மாதிரியான
காஞ்சீபுரத்தைப்பற்றிய அம்சங்கள் ஒன்றாவது சொல்லப்பட்
டிருப்பது இந்த ஸ்தோத்திரத்தின் அழகுகளில் ஒன்றாகும்.
 
இந்த ஸ்தோத்திரத்தில் ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீ காமாக்ஷி
தேவியானவள் ஸ்ரீ லலிதாம்பிகையே.
 
பச்சாத் சதுர்புஜா ஜாதா ஸா பராத்ரிபுராருணா
பாசாங்குசே- கோதண்ட பஞ்சபாண லஸத்கரா ।
லலிதா ஸைவ காமாக்ஷி காஞ்ச்யாம் க்யாதிமுபாகதா ]]
 
மற்ற சதகங்களும் மொழிபெயர்ப்புடன் கூடிய அர்த்த
வியாக்யானங்களுடனும் வெளிவந்திருக்கிறது. இந்த ஐந்து சத
கங்களுடைய ஸ்தோத்திரம் மட்டும் நாகர லிபியில் வெளிவந்து
இருக்கிறது.