This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
காஞ்சிதேசே - காஞ்சீபுரியில், குதுகஜுஷி - உத்ஸாஹத்
தோடு வளிப்பதும்,குமுத -நீலோத்பலங்களின், தபோராசி
யோசு தபஸ்ஸின் பரிபாகமான சந்த்ரனை, சேகரிதே - சிரோபூஷண
மாய் உடையதும்,குலகிரி பரிப்ருட குலபர்வதங்களுக்குத்
தலைவனான ஹிமவானுடைய, குலைக் மணிதீபே - குலத்திற்கு
ஒரே ஒரு (முக்யமான) ரத்ன தீபமாய் விளங்கும் ஒரு ரூபத்தில்,
அயம் ஜன:-
இந்த ஜனமானவன், மன : குருதே - மனத்தைச்
செலுத்துகிறான்.
 
-
 
1. அதாவது, தான் அவ்விதமாக த்யானம் செய்வதை
'அயம் ஜன: மன: குருதே' என்று சொல்லுகிறார்.
 
2. அம்பிகையானவள் தன் பிதாவான ஹிமவானுடைய
குலத்திற்கு ரத்ன தீபமாய், குன்றாவிளக்காய், இருப்பதை நமது
ஆசார்யாளும் 'ரூபாதிகா சிகரி பூபாலவம்சமணிதீபாயிதா பக
வதீ' என்பதாக 'அம்பாஷ்டகத்தில் வர்ணித்திருக்கிறார்கள்.
 

 
वीमहि काञ्चिपुरे विपुलस्तन कलश गरिमपरवशितम् ।
विद्रुमसहचरदेहं विभ्रमसमवायसारसंनाहम् ॥ ३१ ॥
 
37
 
வீக்ஷேமஹி காஞ்சிபுரே விபுல ஸ்தனகலச
 
[கரிம பரவசிதம்1
 
வித்ரும ஸஹசர தேஹம் விப்ரம ஸமவாய
 
[ஸார ஸன்னாஹம் II
 
விபுல ஸ்தனகலச கரிம - பருத்ததான ஸ்தனபாரங்களின்
கனத்தினால், பரவசிதம் - மிகவும் குனிந்ததாயும், விக்ருமஸஹசர
தேஹம் - பவழம் போன்றதான சரீரத்தையுடையதும், விப்ரம
ஸமவாய ஸார ஸன்னாஹம் - காமகேளிகளுடைய சேர்க்கையின்
ஸாரமாகிற (யுத்த) கோலத்தோடு கூடியதுமான ஒரு மூர்த்தியை,
காஞ்சிபுரே - காஞ்சீபுரியில், வீக்ஷேமஹி - பார்க்கிறோம்.
 
कुरुविन्दगोत्रगात्रं कूलचरं कमपि नौमि कम्पायाः ।
कूलङ्कषकुचकुम्भं कुसुमायुधवीर्यसारसंरम्भ्म् ॥ ३२ ॥