This page has not been fully proofread.

36
 
மூகபஞ்சசதீ
 
ஏணசிசு தீர்க்கலோசனம்
 
மான்குட்டியினுடையதைப்
 
P
 
போன்ற நீண்ட கண்களையுடையதும், ஸந்ததம் - எப்போதும்,
நமதாம் - நமஸ்கரிக்கும் பக்தர்களுடைய, ஏன: பரிபந்த்தி-
பாபத்தை தடுப்பதும் (போக்குவதும்), ஏகாம்ரநாத ஜீவிதம்-
ஏகாம்ரநாதருடைய பிராணனாயிருப்பதும், ஏவம் பத தூரம்-
இம்மாதிரி என்று சொல்வதற்கு எட்டாததுமான, ஏகம் - ஒரு
பரம்பொருளை, அவலம்பே - சரணமடைகிறேன்.
 
அம்பிகையினுடைய ஸ்வரூபமானது இம்மாதிரிதானிருக்
கிறதென்பதாக ஒருவராலும் சொல்லமுடியாது என்று இங்கு
சொல்லப்பட்டது. இதேமாதிரி 'ஏவமித்யாகமாபோத்யா', 'ஏதத்
தத் இத்யனிர்தேசயா' என்பதாக ஸ்ரீ லலிதா த்ரிசதியிலும்
சொல்லப்பட்டிருக்கிறது.
 
स्मयमानमुखं काञ्चीमयमानं कमपि देवताभेदम् ।
दयमानं वीक्ष्य मुहुर्वयमानन्दामृताम्बुधौ मम्नाः ॥ २९ ॥
 
ஸ்மயமான முகம் காஞ்சீமயமானம் கமபி
 
[தேவதாபேதம் ।
தயமானம் வீக்ஷ்ய முஹுர் வயம் ஆனந்தாம்ரு
[தாம்புதௌ மக்னா://
 
ஸ்மயமானமுகம்
சிரித்த முகத்தையுடையதும், காஞ்சீமய
மானம் - காஞ்சீபுரியை வியாபித்து விளங்குவதும்,தயமானம்
கருணையோடு கூடியதுமான, கமபி தேவதாபேதம்- ஒரு தேவ
தையை, முஹுர் வீக்ஷய - அடிக்கடி பார்த்து, வயம் - நாம்,
ஆனந்தாம்ருதாம்புதெள - ஆனந்தமென்ற அம்ருத ஸமுத்ரத்தில்,
மக்னா:- மூழ்கியிருக்கிறோம்.
 
कुतुरुजुषि काञ्चिदेशे कुमुदतपोराशिपाकशेखरिते ।
कुरुते जनो मनोऽयं कुलगिरिपरिबृढकुलैकमणिदीपे ॥ ३० ॥
 
குதுகஜுஷி காஞ்சிதேசே குமுத தபோராசி
 
[பாக சேகரிதே ।
 
குருதே ஜனோ மனோபயம் குலகிரி பரிப்ருட
 
[குலைக மணிதீபே ii