This page has not been fully proofread.

முகபஞ்சசதீ
 
தாமாஸ புஷ்பமானது பகலில் மலர்ந்து இரவில் மூடுவ
தினால் அதற்கு ஸூர்யன் மித்ரனாகவும் சந்த்ரன், சத்ருவாகவு
மிருப்பதாகச் சொல்வது கவிகளின் ஸம்ப்ரதாயம். அதையொட்டி
இங்கு சந்த்ரனை ஸரஸிஜ தௌர்பாக்யனென்றும், அவன் அம்பி
கையினுடைய உத்தம்ஸமாக விளங்குவதால் 'சரஸிஜ தெனர்
பாக்ய ஜாக்ரத் உத்தம்ஸே' என்று அம்பிகையை வர்ணிக்கப்
பட்டது.
 
34
 
2. புருஷகாரமென்றால் வீர்யம், ஸாமர்த்யம்,பௌருஷம்
என்று அர்த்தம். அம்பிகை ஸர்வ வித்யா ரூபிணியாயும் வர்ண
மயியாகவும் இருக்கிறபடியால் வாக்கின் ஸாமர்த்யத்தைப்பற்றிய
ஸாம்ராஜ்யத்தோடிருப்பதாக இங்கு சொல்லப்பட்டது. அம்பி
கையின் உபாஸகர்கள் புருஷ ரூபமடைந்த ஸரஸ்வதீ தேவிமாதிரி
ஆகிவிடுவதாகச் சொல்லப்படும். அம்பிகையின் பாதோதகத்
திற்கே இவ்விதமான வாக்விலாஸத்தைக் கொடுக்கும் மஹிமை
யுண்டென்பதாக
 
'கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம் ।
ப்ரக்ருத்யா ரக்தானாம்பி ச கவிதா காரணதயா
 
கதா தத்தே வாணீ முக கமல தாம்பூல ரஸதாம் II'
 
என்று 'ஸௌந்தர்யலஹரி'யில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இவ்
விதமான பலனை யுத்தேசித்துச் செய்யப்படும் உபாஸனா க்ரமங்
களுக்கு ஸாரஸ்வத ப்ரயோகங்களென்று பெயர்.
 
मोदित मधुकरविशिखं स्वादिमसमुदायसारकोदण्डम् ।
आहतकाञ्चीखेलनमा दिममारुण्यभेद माकलये ॥ २६ ॥
 
மோதித மதுகர விசிகம் ஸ்வாதிம் ஸமுதாய்
[ஸார கோதண்டம் ।
ஆத்ருத காஞ்சீ கேலனம் ஆதிமம்
 
[ஆருண்யபேதம் ஆகலயே II
 
மோதித மதுகர விசிகம்- வண்டுகளுக்கு ஸந்தோஷத்தைக்
கொடுக்கும் (புஷ்ப) பாணங்களையுடையதும், ஸ்வாதிம ஸமுதாய-
தித்திப்பெல்லாம் சேர்ந்து, ஸார கோதண்டம்- ஸாரமாயிருக்கும்
 
மு