This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
அதாவது, அவ்விதமாயிருக்கும் ஸ்ரீ காமாக்ஷியை தனக்கு
எப்போது பார்க்கக் கிடைக்குமோ என்று சொல்லுகிறார்.
 
32
 
पुण्या कापि पुरंत्री पुडितकंदर्पसंपदा वपुषा ।
पुलिनचरी कम्पायाः पुरमथनं पुलक निचुलित कुरुते ॥ २२ ॥
 
புண்யா காபி புரந்த்ரீ புங்கித கந்தர்ப்ப
 
ஸம்பதா வபுஷா ।
 
புளினசரீ கம்பாயா: புரமதனம் புளக
 
நிகளிதம் குருதே !!
 
கம்பாயா: புளினசரீ - கம்பாநதியின் மணல் திட்டுகளில்
ஸஞ்சரிப்பவளும், புண்யா புரந்த்ரீ-புண்யம் நிறைந்த க்ருஹிணி
யாயுமிருக்கும், காபி -வர்ணிக்கமுடியாத ஒருவள், புங்கித கந்
தர்ப்ப ஸம்பதா - மன்மதனுடைய ஸம்பத்து நிறைந்ததான,
வபுஷா - தன் சரீரத்தினால், புரமதனம் - முப்புரங்களை யெரித்த
வரான பரமசிவனை, புளக நிசுளிதம் - மயிர்க்கூச்சல் நிறைந்த
வராக, குருதே -செய்கிறாள்.
 
1.புளினமென்பது நதிகளிலிருக்கும் மணல் திட்டைக்
குறிப்பதுடன் அவற்றின் கரையையும் குறிக்கும்.
 
2. புரந்த்ரீ என்றால் வீட்டிலிருக்கும் ஜனங்களைத் தாங்கும்
ஹுமங்கலிஸ்திரீ அல்லது, உயிருடனிருக்கும் பதி புத்ரர்களை
யுடைய (ஸுமங்கலி) ஸ்திரீ என்று அர்த்தம்.
 
तनिमा द्वैतवलग्नं तरुणारुणसंप्रदायतनुलेखम् ।
तटसीमनि कंपायास्तरुणिमसर्वस्वमाद्यमद्राक्षम् ॥ २३ ॥
 
தனிமாத்வைத வலக்னம் தருணாருண
 
ஸம்ப்ரதாய தனுலேகம் ।
தடஸீமனி கம்பாயா: தருணிம ஸர்வஸ்வம்
 
ஆத்யம் அத்ராக்ஷம் ॥
 
தனிமாத்வைத வலக்னம்-மிகவும் மெல்லியத்தான இடுப்பை
யுடையதும்,தருணாருண ஸம்ப்ரதாய-ஸரியான சிகப்பு நிறத்தை
வழக்கமாக உடைய தனுலேகம் - மெல்லிய சரீரத்தோடு கூடிய