We're performing server updates until 1 November. Learn more.

This page has not been fully proofread.

ஸ்ரீ காமாக்ஷக்ஷ்யை நம:
அவதாரிகை.
 
அம்பிகையைப்பற்றிய ஸ்தோத்திரங்களைச் செய்தவர்களில்
 
ஸ்ரீமதாசார்யாள்
 
முதன்மையானவர்களென்று
 
சொல்வதில்
 
யாதொரு ஆக்ஷேபமுமிருக்காது. அவருக்கு அடுத்த படியிலி
ருப்பவராக மூக கவியைச் சொல்லவேண்டும்.
அதாவது மூக
கவியை விடச் சிறந்த வாக் விசேஷத்தையுடைய ஐவி யாரென்று
கேட்டால் நமது ஆசார்யாளைச் சொல்லவேண்டுமே தவிர வேறு
ஒருவரையும் சொல்லமுடியாது.
 
ஊமை
 
மூகருடைய ஜீவிய சரித்திரத்தைப்பற்றி அதிகமாகத் தெரிந்
துகொள்வதற்கு நமக்கு ஆதாரங்கள் யாதொன்றுமில்லை.
யொருவர் காஞ்சீபுரத்தில் ஸ்ரீ காமாக்ஷியின் ஸன்னிதியிலிருந்து
கொண்டு அம்பிகையை உபாஸித்துவந்தாரென்றும், அப்போது
ப்ரஸன்னமான அம்பிகையின் உச்சிஷ்டம் தெறித்து அந்த உச்
சிஷ்டமே அம்ருதரூபமாக ஏற்பட்டு அவருக்கு உயர்ந்த வாக்கை
உண்டாக்கவும் அவர் மஹா கவியாக ஆனாரென்றும் தற்காலம்
காமகோடி பீடத்தில் விளங்கிவரும் ஸ்ரீ சங்கராசார்யாள் சொல்லி
யிருக்கிறார்கள். (நன்மொழிகள் பக்கம் 103).
 
தவிர, காஞ்சீ ஸ்ரீ காமகோடி பீடத்திய குரு பரம்பரையில்
(இரண்டாவது) வித்யாகனர் என்பவருக்கு அடுத்தாற்போல் வந்த
(நான்காவது) சங்கரர் என்பவர்தான் மூக கவியென்பதாக ஒரு
அபிப்பிராயமும் உண்டு. இவர் ஆதியில் ஊமையாக இருந்ததாக
வும் ஸ்ரீ வித்யாகனேந்த்ர ஸரஸ்வதியவர்களுடைய அனுக்ரஹத்
தினால் அவ்விதக் குறை நீங்கப்பெற்று மஹா கவியாக மாறி அவ
ருக்கு அடுத்தாற்போல் காமகோடி பீடத்திலும் இருந்து விளங்கி
னாரென்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இவருடைய பெயர்
மூக சங்கரரென்றும் சொல்லப்படும். இவர் A. 0.398-ல் பீடா
ரோஹணம் செய்து A.D.437-ல் ஸித்தியடைந்ததாகவும் நிர்ண
யிக்கப்பட்டிருக்கிறது.