This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
27
 
மதுரதனுஷா - இனிப்போடு கூடிய வில்லையுடையதும், மஹீ
தரஜனுஷா -பர்வதராஜனிடமிருந்து பிறப்பையுடையதும், ஸுரபி
பாண்ஜுஷா மணமுள்ள பாணங்களையுடையதும், காஞ்சிபுரே
காஞ்சீபுரியில், கேளிஜுஷா - விளையாடிக்கொண்டிருக்கிறதும்,
பந்து ஜீவ காந்திமுஷா - செம்பரத்தம்பூவின் காந்தியை அபஹ
ரித்ததுமான (தோற்கடித்த காந்தியோடுகூடிய), சித்வபுஷா - சித்
ஸ்வரூபத்தோடு கூடிய ஒரு மூர்த்தியினால், நந்தாமி - ஆனந்த
மடைகிறேன்.
 
அம்பாளுடைய
ய வில்லானது கரும்பாகையால் மதுர தனுஸ்
என்றும், பாணங்கள் ஐந்து புஷ்பங்களாகையால் ஸுரபி பாணங்
களென்றும், அம்பாளுடைய நிறமானது அருணமாகையால்
பந்துஜீவ புஷ்பத்தின் காந்தியை அதிசயித்ததென்றும் சொல்லப்
பட்டது. அம்பிகையின் பாணங்கள்
 
'கமலம் கைரவம் ரக்தம் கல்ஹாரேந்தீவரே ததா।
ஸஹகாரகமித்யுக்தம் புஷ்ப பஞ்சகமீச்வரி !] •
 
என்று சொல்லப்படும்.
 
मधुरस्मितेन रमते मांसलकुचभारमन्दगमनेन ।
मध्येकाञ्चि मनो मे मनसिजसाम्राज्यगर्वबीजेन ॥ १७ ॥
 
மதுர ஸ்மிதேன ரமதே மாம்ஸல குசபார மந்த
கமனேன்
 
மத்யே காஞ்சி மனோ மே மனஸிஜ ஸாம்ராஜ்ய கர்வ
பீஜேன் ]!
 
மதுரஸ்மிதேன - அழகான மந்தஹாஸத்தோடு கூடியதும்,
மாம்ஸலகுசபார் - பருத்ததான ஸ்தனங்களின் பாரத்தால், மந்த
கமனேன்-மெதுவான நடையோடு கூடியதும், மத்யே காஞ்சி-
காஞ்சீபுரியின் மத்தியிலிருக்கும், மனஸிஜஸாம்ராஜ்யகர்வ-மன்
மதன் ராஜ்யபாரம் நடத்துவதிலுள்ள கர்வத்திற்கு, பீஜேன-கார
ணமாயிருப்பதுமான ஒரு பரம்பொருளால், மேமன:-
என்னு
டைய மனதானது, நமதே - களித்துக்கொண்டிருக்கிறது.
 
பூர்வம் பரமசிவனுடைய நேத்ராக்னியினால் பஸ்மீகரிக்கப்
பட்ட மன்மதனானவன் காமேச்வரியின் கடாக்ஷத்தினால் மீண்டும்