This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
த்வதீயானாம் பாஸாம் ப்ரதிபலன ராகருணதயா
 
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் !!'
 
(ஸௌந்தர்யலஹரீ)
 
अङ्कितशङ्करदेहां अङ्कुरितोरोजकङ्कणाश्लेषैः ।
 
आधिकाञ्चि नित्यतरुणीं अद्राक्ष काञ्चिदद्भुतां बालाम् ॥१५॥
 
அங்கித சங்கர தேஹாம் அங்குரிதோரோஜ
 
கங்கணாச்லேஷை: ।
 
காஞ்சித் அத்புதாம் பாலாம் ॥
 
அங்குரிதோரோஜ கங்கணாசலேஷை:- அங்குரிதமான ஸ்த
னங்கள், வளையல்கள் இவைகளோடு பொருந்திய ஆலிங்கனங்
களால், அங்கித சங்கரதேஹாம் - தன் பதியான பரமசிவனுடைய
சரீரத்தை அடையாளங்களோடு இருக்கச்செய்தவளும், நித்ய
தருணீம் - நித்யமான யௌவனத்தோடு கூடியவளுமான, காஞ்
சித் அத்புதாம் பாலாம் -ஏதோ ஒரு அத்புதமான பாலையை,
அதிகாஞ்சி - காஞ்சீபுரியில், அத்ராக்ஷம் - பார்த்தேன்.
 
அதிகாஞ்சி நித்யதருணீம் அத்ராக்ஷம்
 
25
 

 
1. அம்பிகையானவள் தன் பதியைத் திரும்பவும் அடை
வதற்காக காஞ்சீபுரிக்கு வந்தபோது அங்கு வந்த நாரதமஹர்ஷி
யானவர் அம்பிகைக்கு பஞ்சபாண மந்த்ரத்தை உபதேசித்து
அதை ஜபித்து தபஸ் செய்யும்படி சொல்லிப்போனார்.
 
'சந்த்ரசூடஸ்ய பார்யாத்வம் இச்சந்தீ கிரிநந்தினீ ।
உபாயம் முநிசார்தூலம் அப்ருச்சத் வினயான்விதா ॥
அத தத்ர முநிச்ரேஷ்ட: ஸந்துஷ்ட: கன்யகார்ச்சனை: 1
சிவ ப்ராப்த்யை ஸு கோபாயம் பஞ்சபாண மனும் முனி: ।
உபதிச்ய ததா கௌர்யை கதவான் தக்ஷிணாம் திசம் ।I'
 
அதன்பேரில் ஸைகதத்தால்(மணலால்)லிங்கத்தை ஸ்தாபித்து
தன் பதியை தியானித்து அம்பிகையானவள் உக்ரமான தபஸ்
செய்யும்போது பஞ்சபாணமந்த்ர ஜபத்தினாலுண்டான காமாக்னி
யினால் பீடிக்கப்பட்ட பரமசிவன் அம்பிகையின் ப்ரேமாதிசயத்தை