This page has not been fully proofread.

22
 
"
 
மூகபஞ்சசதீ
 
டைய மானத்தைக்காப்பாற்றுவதற்காக அம்பிகையானவள் அவர்
கள் வஸ்த்ரங்களைத் திரும்பவும் உடுத்திக்கொள்ளும் வரையில்
பரமசிவனுடைய நேத்ரங்களைத் தன் கைகளால் மறைத்தாள்.
அப்படி மறைத்தது முகூர்த்தகாலமாய் இருந்தபோதிலும் (தேவ
லோகத்திய காலமாதலால்) லோகங்களிலெல்லாம் இருள் சூழ்ந்து
ஸூர்ய சந்த்ரர்கள் ஒளி இழந்து படவாமுகாக்னியானது அணை
ந்து ஸமுத்ரங்கள் கரைபுறண்டன. அந்த ஸமயம்
 
'தஸ் ஸமஸ்தலோகேஷ தேவமான முஹுர்த்தத:
ஸூர்யசந்த்ரமஸௌநஷ்டௌ நஷ்டோக்னீர்பாடவஸ்ததா!!
ப்ரச்சன்ன நேத்ர மாஹாத்ம்யாத் சந்த்ரஸூர்யாக்ன்யதர்ச
காடாந்தகார ஸம்வீதே ஜகத்யேகார்ணவீகருதே ।
ஸம்பூதே ப்ரளயே கோரே
 
77
 
[னாத்
 
என்றபடி கோரமான ப்ரளயமேற்பட்டு விட்டது. அவ்வித ஸம
யங்களிலும் அழியாத வரம் பெற்றிருக்கும் மார்க்கண்டேயரான
வர் ஜலத்தில் மிதந்துகொண்டு தங்குவதற்கு இடமொன்றும்
தோன்றாமல் பரமசிவனை ப்ரார்த்திக்க, பரமக்ருபாநிதியாகிய பரம
சிவன் காஞ்சியில் ருத்ரசாலையில் அவ்யக்தமான தேஜஸுடன்
சித்ரூபியாய் சூதபீஜாக்ருதியோடு விளங்கினார். அப்போது
 
அந்த பீஜத்திலிருந்து ஒரு மா மரமானது கிளம்பி நான்கு வேதங்
களாகிற நான்கு கிளைகளுடன் ப்ரளய ஜலத்திற்கு மேல்பட்டதாக
வளர்ந்தது. அதைக்கண்ட மார்க்கண்டேயரானவர் அதின் கிளை
களில் ஏறிக்கொண்டார். அதற்கு மேல் அவர் தைர்யமடைந்து
அந்த சூதவருக்ஷத்தின் மூலத்தில் ப்ரவேசிக்கவும், அங்குதேஜோ
மயமான ஓர் பெரிய நகரத்தைப் பார்த்தார்.
 
அதைக்கண்டு
 
ஆச்சர்யமடைந்து மார்க்கண்டேயர் அங்கு அந்த மரத்தின் பழங்
களைத் தின்றுகொண்டிருந்த ஸுப்ரஹ்மண்யரைப்பார்த்து அந்த
அதிசயங்களைப்பற்றிக்கேட்டார். அப்போது ஸுப்ரஹ்மண்ய
ரானவர் அந்த நகரம் காஞ்சீ க்ஷேத்ரமென்றும் அதை அம்பிகை
யானவள் ப்ரளயகாலத்திலும் நாசமடையாத வண்ணம் தன்னு
டையதேஜஸ்ஸினால் காப்பாற்றிவருகிறாளென்றும், அதினாலேயே
அந்த நகரத்திற்கு ப்ரளயஜித் என்று பெயரென்றும், அந்த சூத
வ்ருக்ஷமானது ஸாக்ஷாத் சங்கரருடைய ஸ்வரூபமென்றும், அம்
 
பிகையின் பதியான காமேச்வரரே அந்த வருக்ஷத்தின் பீஜரூப