This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
மென்று கேட்டார்கள். அப்போது பரமசிவன் அவர்களை நோக்கி
கைலாஸத்திலிருக்கும் ஸகல புருஷர்களும் தன்னுடைய அம்சங்
களென்றும், கைலாஸத்திய ஸ்திரீகளெல்லோரும் கௌரியினு
டைய அம்சங்களென்றும், அப்படியிருந்தும் புருஷர்களுக்குள்
தான் ச்ரேஷ்டமாயிருப்பது மாதிரி ஸ்திரீகளுக்குள் கௌரியே
ச்ரேஷ்டமானவளென்றும், ஆகவே கௌரீதான் தன்னுடைய
அர்த்தாஸனத்தில் வீற்றிருக்கத் தகுதியானவள் என்பதாக,
 
'மமாம்ச ஜாதா: கைலாஸே பும் ரூபேண ஸமன்விதா: ।
ததா கௌர்யாம்ச ஸம்பூதா: மம காந்தா ஹி ஸர்வச: //
பும் ரூபாணாம்ஸ்து ஸர்வேஷாம் வரோஹம் புருஷேச்வர: ।
ததா ஸ்த்ரீணாம் வரா கௌரீ மம காந்தாஸ் ஸசக்தய: //
தஸ்மாத் யூயம் மஹாகௌர்யா: கிஞ்சின் ந்யூனதயான்விதா: 1
ஸர்வாஸாம் சைவ சக்தீனாம் ஏஷோத்க்ருஷ்டா ஹி பார்வதி!!
ஸமாஸனே ஸமாஸீனா வஸத்யந்த: புரே ஸதா ।
ததாஸனம் ந தாதவ்யம் யுஷ்மப்யம் உமயா ஸஹ ॥
 
என்று பதில் சொன்னார்.
 
21
 
அப்போது, தாங்கள் கௌரியின் அம்சங்கள்தானென்றும்
ஆகவே அவளுக்குக் கீழ்பட்டவர்களென்றும் அதினால் பரமசிவ
னுடன் ஸமமான ஆஸனத்திற்குத் தகுதியற்றவர்களென்றும்,
சொல்லப்பட்ட அந்த சக்திகள் மிகவும் கோபங்கொண்டு தாங்கள்
கௌரிக்குத் தாழ்ந்தவர்களல்லவென்றும் தங்களுடைய அம்சமா
கத்தான் கௌரியானவள் தோன்றினாளென்றும் அதற்குமாறாக
பரமசிவன் அவளிடத்திலுள்ள பக்ஷபாதத்தினால் சொன்னாரென்
றும்,
 

 
'கிம் ப்ரவீஷி மஹாதேவ பக்ஷபாதம் ஸமாச்ரித: 1
 
கௌர்யாம் ச ஜாதா ந வயம் ஸாஸ்மதம் ச ஸமுத்பவா !!'
 

 
என்று சொல்லி, கௌரியானவள் தங்களைவிட எந்த குணத்தில்
உயர்ந்தவளென்று கேட்கவும் பரமசிவன் நகைத்து அவர்களுடைய
கர்வத்தைப்போக்க உத்தேசித்து ஸமகாலத்தில் அவர்களெல்
லோருடைய வஸ்த்ரங்களும் நழுவும்படிச் செய்தார். உடனே
அவர்கள் லஜ்ஜை அடைந்து தங்கள் மர்ம ப்ரதேசங்களை மறைப்
பதற்காக பூமியில் விழுந்துவிட்டார்கள். அப்போது அவர்களு