This page has not been fully proofread.

20
 
மூகபஞ்சசதீ
 
1. காமேச்வரரானவர் பஞ்சப்ரம்ஹமயமான மஞ்சத்தில்
காமேசவரியை (ஸ்ரீலலிதாம்பிகையை) தன் இடது துடையின் மீ
வைத்துக்கொண்டு ஸதாகாலமும் அம்பிகையின் அழகில் ஈடுபட்டு
ஆனந்தத்தில் மூழ்கி அம்பிகையையே பார்த்தவண்ணமாய் இருப்
பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இருவரும் ஒரேவிதமான வயது
ஸௌந்தர்யம், ஆயுதங்கள் முதலியவைகளுடன் பொருந்தியிருப்
பவர்களாகச் சொல்லப்படும். அவரும் ஸ்தாஷோடசவார்ஷிக:,
அம்பிகையும் ஸதா ஷோடசவர்ஷியா. (அதினால் தான் இங்கு
ஆரப்தயௌவனோத்ஸவமென்று சொல்லப்பட்டது).
 
2. ஸ்திரீகளை வயதின் க்ரமமாக வர்ணிக்கையில் பதினாறு
வயது வரையில் பாலை என்றும், அதற்குமேல் இருபது வரையில்
தருணீ (யௌவனை) என்றும், அதற்குமேல் ஐம்பது வரையில்
ப்ரௌடை என்றும், அதற்கு மேல் வ்ருத்தையென்றும் சொல்
லப்படும்.
 

 
'பாலா ஸ்யாத் ஷோடசாப்தா ததுபரி தருணீ
விம்சதேர் யாவதூர்த்வம்
 
ப்ரௌடாஸ்யாத் பஞ்ச பஞ்சா—
 
சதவதி பரதோ வ்ருத்ததாமேதி நாரீ ।
 
அம்பிகை ஸதாஷோடசவர்ஷீயாகச் சொல்லப்படுவதால் இங்கு
"ஆரப்தயௌவனோத்ஸவம்'' என்றும், இதற்கு முன்வந்த
9-வது சலோகத்தில் ஆரூடயௌவனாடோபாம் " என்றும்
 
»
 
சொல்லப்பட்டது.
 
3. ஆம்னாயமென்பது வேதங்களைக் குறிப்பதுடன் தந்த்ர
சாஸ்திரங்களையும் குறிக்கும்.
 
4. காஞ்சீபுரியிலிருக்கும் பரமசிவனுடைய மூர்த்திக்கு
ஏகாம்பரநாதர் என்று பெயர். அவரே காமேச்வ ஸ்வரூபமென்று
சொல்லப்படும். கைலாஸத்தில் ஒரு மையம் பரமசிவனானவர்
அந்தபுரத்தில் பார்வதீ தேவிக்கு அர்த்தாஸனம் கொடுத்து
ஆனந்தமாக இருக்கும்போது அறுபத்திநாலு கலைகளின் ரூபிணி
களும் அவருக்கு மிகவும் ப்ரியைகளாயுமுள்ள சக்திகள் சற்று
அகங்காரம் கொண்டவர்களாய் பரமசிவனை நோக்கித் தங்களுக்
கும் பார்வதீதேவி மாதிரி அர்த்தாஸனம் கொடுக்கவேண்டு