This page has not been fully proofread.

18
 
மூகபஞ்சசதீ
 
காஞ்சீரத்னவிபூஷாம் காமபி கந்தர்ப்ப
 
பரமாம் கலாமுபாஸே பரசிவ வாமாங்க
 
1
 
[ஸூதிகாபாங்கீம் !
 
[பீடிகாஸீனாம் !!
 
காஞ்சிரத்ன விபூஷாம் - காஞ்சியாகிற ரத்னத்தை அலங்கார
மாயுடையவளும், கந்தர்ப்பஸ அதிகாபாங்கீம் - மன்மதனுக்குப்
பிறப்பிடமாக இருக்கும் கடாக்ஷத்தையுடையவளும்,
வாமாங்க பீடிகாஸீனாம் - பரமசிவனுடைய
வீற்றிருப்பவளுமான,காமபி -ஒரானொரு, பாரமாம் கலாம்-
பரம் பொருளை, உபாஸே -உபாணக்கிறேன்.
 
பரசிவ
 
துடையில்
 
1. காஞ்சீ என்றால் ஸ்திரீகள் இடுப்பில் தரிக்கும் மேகலை
(ஒட்டியாணம்) என்று அர்த்தம். அதிலிழைக்கப்பட்ட ரத்னங்
களால் அலங்கரிக்கப்பட்டவள், "காஞ்சீரத்ன விபூஷா' என்றும்
சொல்லலாம்.
 
2. பரமசிவனுடைய நேத்ராக்னியினால் மன்மதன் எரிக்கப்
பட்ட பிறகு லலிதாம்பிகையும் காமேச்வரரும் தோன்றியதைப்
பற்றியும், பண்டாஸுர ஸம்ஹாரமான பிறகு தேவர்களுடைய
வேண்டுகோளுக்கு இணங்கி அம்பிகையானவள் மன்மதனைத்
தன் கடைக்கண் பார்வையினால் பிழைப்பு மூட்டியதைப் பற்றியும்,
லலிதோபாக்யானத்தில் விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
தன் புருஷன் இறந்ததினால் மிகவும் துக்கித்திருக்கும் தீதேவியை
அம்பிகை பார்த்தவுடன், மன்மதன் உண்டானது பின்வருமாறு:-
'அத தத் தர்சனோத்பன்ன காருண்யா பரமேச்வரீ ।
காந்தம் கடாஷயாமாஸ காமேச்வரம் அநிந்திதா ॥
தத: கடாக்ஷாத் உத்பன்ன: ஸ்மயமான முகாம்புஜ:
பூர்வதேஹாதிகருசி: மன்மதோ மதமேதுர: //
த்விபுஜ: ஸர்வபூஷாட்ய: புஷ்பேஷு: புண்ட்ரகார்முக:
ஆனந்தயன் கடாக்ஷேண பூர்வஜன்மப்ரியாம் ரதிம் II'
 
இவ்விதம் மன்மதனுடைய (மறு) பிறப்பானது அம்பிகையின்
கடாக்ஷத்தினால் ஏற்பட்டதால் அந்த கடாக்ஷத்தை அவன் பிறந்த
இடமாக (ஹூதிகாக்ருஹமாக) வர்ணிக்கப்பட்டது.