This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
துங்காபிராம குசபர சருங்காரிதம் ஆச்ரயாமி
 
[காஞ்சிகதம்
 
கங்காதர பரதந்த்ரம் ச்ருங்காராத்வைத
 
15
 
(தந்த்ர ஸித்தாந்தம் ॥
 
துங்காபிராமகுசபய சருங்காரிதம் - உன்னதமும் அழகுள்
ளதுமான குசபாரத்தால் அலங்கரிக்கப்பட்டதும், காஞ்சிகதம்-
காஞ்சீபுரியிலிருப்பதும், ச்ருங்காராத்வைத தந்த்ர ஸித்தாந்தம்-
ச்ருங்காரமாகிற அத்வைத் தந்த்ரத்தின் முடிவாயுமிருக்கும், கங்
காதர பரதந்த்ரம் - சிவனுடைய பத்னியை, ஆச்ரயாமி-சரண
மடைகிறேன்.
 
1. பரதந்த்ரமென்றால் பிறருக்கு வசப்பட்டிருப்பது என்று
அர்த்தமாகையால் இங்கு (புருஷனுக்கு வசப்பட்டிருப்பதால்) பதி
வரத்தையைக் குறிக்கும். அம்பிகையினுடைய பாதிவரத்யத்தைப்
பற்றி மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
 
'களத்ரம் வைதாத்ரம் கதி கதி பஜந்தே ந கவய:
ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தனை: ]
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனாமசரமே
குசாப்யாம் ஆஸங்க: குரவகதரோரப்யஸுலப: //
 
(ஸொந்தர்யலஹரி)
 
2. இந்த ஸ்தோத்ரத்திய எல்லா சதகங்களிலும் சருங்கார
சாஸ்த்ரத்தின் ஸித்தாந்தமாக அம்பிகை இருப்பதாக இங்கும்
பிற இடங்களிலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. சருங்கார சாஸ்த்
திரத்திற்கும் அம்பிகையின் உபாஸனைக்கும் என்ன ஸம்பந்தம்
இருக்கிறதென்பதாக ஸந்தேஹம் தோன்றக்கூடும்.ச்ருங்கார ரஸ
மென்பது ஸ்த்ரீ புமான்களுக்குள் பரஸ்பரமிருக்கும் ஆசைக்கும்
செய்கைகளுக்கும் காரணமானது. அதையே ரஸங்களுக்குள் முத
ன்மையானது (ஆதிரஸம்) என்று சொல்லப்படும். இதைப் பற்றி
வெட்கப்பட வேண்டியாவது வெறுக்க வேண்டியாவது யாதொரு
அம்சமும் ஸரியாக யோசிப்பவர்கள் மன னத்தில் தோன்றுவதற்கு
நியாயமில்லை. இது ஸத்வ குணத்திலிருந்து ஏற்படுகிறதென்றும்,
அகண்டமும், ஸ்வப்ரகாசமுமான ஆனந்தரூபமென்றும், சின்மய
மானதென்றும், சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ரஸத்திலிருந்து
ஏற்படும் ஆனந்தத்தினால் மற்ற வஸ்துக்களெல்லாம் மறக்கப்பட்டு